வாழ்வின் அலைகள் (கார்க்கி)

வாழ்வின் அலைகள் (கார்க்கி)
மாக்ஸிம் கார்க்கி அவர்கள் எழுதியது. தமிழில்: என்.கிருஷ்ணசாமி அவர்கள்.
மாஸ்கோ அந்நிய மொழிகள் பதிப்பகத்தார் ஆங்கிலத்தில வெளியிட்ட Forma Gordeyev என்ற நூலின் தமிழாக்கமே இந்த வெளியீடு. வாழ்க்கையை மூடியிருந்த திரையைக் கிழித்து பொய்மையை அகற்றி யதார்ததவாதம் பேசினார் கார்க்கி. அவருடைய படைப்புகள் தினம் தினம் நடமாடுகின்ற நாம் கண்முன் காண்கின்ற பாத்திரங்கள். அவர்களது செய்கைகளிலும், பேச்சுக்களிலும் நம்மை நாமே பார்த்துக்கொள்கிறோம். சிந்திக்கத் துவங்குகிறோம். அவருடைய நெஞ்சத்தோடு நம் நெஞ்சத்தையும் பதித்துக்கொள்கிறோம்.
இந்த போமா யார்? எங்கோ வால்கா நதிக்கரையில் இக்னட் என்பவனுக்குப் பிறந்த மகனா? கார்க்கியின் கற்பனை சிருஷ்டிதானா? இல்லவே இல்லை. உலகம் நெடுக இப்படிப்பட்ட போமாக்கள் இன்னமும் இருக்கிறார்கள். தீய சக்தியை எதிர்த்துப்போராடும் நல்ல இதயங்கள் இவை. இவற்றின் தியாகமே வாழ்வின் எதிர்கால சுபீட்சத்திற்கு வித்து. இப்படி எத்தனை ஜீவன்களில் தவத்தால் நம் வாழ்வு படிப்படியாக லட்சியத்தை நோக்கி செல்கிறது என்பதை எண்ணிப்பார்க்க வியப்பாக இருக்கிறல்லவா?
கார்க்கியின் இந்த நவீனம் ஒவ்வொரு வாசகர் மனதிலும் தமது சொந்த வரலாற்றையே கூறுவது போன்ற எண்ணத்தை உண்டாக்கும்