இருத்தலியமும் மார்க்ஸியமும்
இருத்தலியமும் மார்க்ஸியமும்
பத்தொன்பதாம், அருபதாம் நூற்றாண்டுகளில் மேற்கு நாடுகளில் ஏற்பட்ட சமூக, பண்பாட்டு நெருக்கடிகளுக்கு எதிர்வினையாகத் தோன்றி மானுட அந்நியமாதல், தனிமனித சுதந்திரம், மானுட வாழ்க்கையின் அர்த்தம் (அல்லது அர்த்தமின்மை) ஆகியன குறித்த கேள்விகளை எழுப்பி அவற்றுக்கான விடைகளை வழங்க முற்பட்ட தத்துவப்போக்கான இருத்தலியத்தின் முக்கிய பிரதிநிதிகளில் பாஸ்கால், கீர்க்கேகார்ட், நீட்செ, ஹைடெக்கெர், காம்யு, சார்த்தர் ஆகிய அறுவரின் முக்கிய கருத்துகளை, அவர்களது சமூக, வரலாற்றுச் சூழலுடனும் அவர்களுக்கு முந்திய ஐரோப்பியத் தத்துவ மரபுடனும் தொடர்புபடுத்தி விளங்குகிறது இந்நூல். அவர்களால் விமர்சிக்கப்பட்ட ஹெகலியம், அறிவொளிச் சிந்தனை மரபு ஆகியன குறித்த சுருக்கமான அறிமுகம், இருத்தலியலாளர்கள் எழுப்பும் கேள்விகளுக்கான மார்க்ஸிய விடைகள் என்னும் வடிவத்தில் மார்க்ஸியத் தத்துவம் குறித்து செழுமையான விளக்கம் ஆகியனவற்றை வழங்குகிறது. மேற்சொன்ன ஆறு இருத்தலியத் தத்துவவாதிகளில், நடைமுறைரீதியாகவும் சிநதனைரீதியாகவும் மார்ஸியத்துடன் நெருக்கமாக வந்து சேர்ந்த சார்த்தரின் கலை - இலக்கிய, தத்துவ, அரசியல் கருத்துகளைத் தொகுத்துக் கூறும் இந்த நூல் சார்த்தர் எழுப்பும் கேள்விகள், மார்க்ஸியத் தத்துவத்தையும் நடைமுறையையும் செழுமைப்படுத்த உதவக்கூடியவை என்பதைச் சுட்டிக் காட்டுகின்றது.
இருத்தலியமும் மார்க்ஸியமும் - Product Reviews
No reviews available