வணக்கம் துயரமே

0 reviews  

Author: பிரான்சுவாஸ் சகன்

Category: ஈழம்

Available - Shipped in 5-6 business days

Price:  190.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

வணக்கம் துயரமே

.

‘வணக்கம் துயரமே’ பிரஞ்சு இலக்கியத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய நாவல். நாவலாசிரியர் பிரான்சுவாஸ் சகன் (1935 – 2004) மிக முக்கியமான படைப்பாளி – தீவிரமான பெண்ணியவாதி. பெண்ணிய இயக்கத்துடன் பல சந்தர்ப்பங்களில் முரண்பட்ட பெண்ணியவாதி. இவரது பல நாவல்கள் வெற்றிகரமான திரைப்படங்களாக்கப்பட்டன. ஒரு இளம் பெண்ணின் மரபை மீறிய வாழ்க்கையைப் பேசும் இப்படைப்பு கடும் தாக்குதலுக்கு உள்ளானது. பாண்டிச்சேரியில் பிறந்து பல ஆண்டுகளாக பிரான்சில் வாழ்ந்துவரும் படைப்பாளியான நாகரத்தினம் கிருஷ்ணா இந்நூலைச் சிறப்பாக மொழிபெயர்த்திருக்கிறார்.

பிரான்சுவாஸ் சகன்

பிரான்சுவாஸ் சகன் (1935 - 2004) ‘அழகான ராட்சஷி’யென (le Charment monstre) சக படைப்பாளிகளால் பிரியமாக அழைக்கப்பட்ட பிரான்சுவாஸ் சகன், இலக்கிய உலகில் கால் பதித்தபோது பதினெட்டு வயது. வயது கேற்பத் துருதுருப்பும் உற்சாகமும் எழுத்திலும் வெளிப்பட்டது. உணர்ச்சிபூர்வமான நடையில் பாசாங்கற்ற சொற்களூடாக மன உள்ளோட்டங்களை அழகாய் வெளிப்படுத்திய பிரான்சுவாஸ் சகன் சமகால பிரெஞ்சுப் பெண் எழுத்தாளர்களில் முக்கியமானவர். பிரெஞ்சு தேச இலக்கியவெளியில் ‘புதிய அலை’ இயக்கத்தை முன்னெடுத்தவர்.

வணக்கம் துயரமே - Product Reviews


No reviews available