தைலம் பரபர தலையே பறபற

தைலம் பரபர தலையே பறபற
தலைவலியும் காய்ச்சலும் தனக்கு வந்தால்தான் தெரியும். இதைச் சொல்லாதவர்கள் யாருமே இருக்க முடியாது. இதைச் சொல்லிவிட்டு தைலம் தேய்த்துக் கொள்ளாதவர்களும் இருக்க முடியாது. ஆனால், தைலம் தேய்த்துக் கொண்டால் தலைவலி போய்விடும் என்பதே ஒரு மூட நம்பிக்கைதான்.எவ்வளவோ காரணங்கள்; எத்தனையோ விதமான தலைவலிகள். எல்லாவற்றுக்கும் சிகிச்சை முறைகள் இருக்கின்றன. தலைவலி வந்தால் என்ன செய்வது? வராமல் இருக்க என்ன செய்வது? என்னென்ன விதமான சிகிச்சை முறைகள் இருக்கின்றன? என்று பல கேள்விகளுக்கு விடையளிக்கிறது இந்நூல்.சாதாரணத் தலைவலிதானே என்று அலட்சியமாக விட்டுவிடுவதால் என்னென்ன பிரச்னைகள் வரும்? எங்கே போய் முடியும்?உடம்பில் மறைந்திருக்கும் ரத்தக் குழாயில் கசிவு, தண்டுவடத்தில் ஓட்டை, பக்கவாதம்,மூளைக்கட்டி, மூளை நரம்பு பாதிப்பு போன்ற சீரியஸான பிரச்னைகளை வெளிக்காட்டும் அறிகுறியாகக்கூட தலைவலி இருக்கலாம்.ஆகவே, எந்தவிதமான தலைவலியையும் நாம் எளிதாக எடுத்துக்கொள்ளக் கூடாது. உடனே,மருத்துவரைப் பார்த்து ஆலோசனை கேட்பதே நல்லது என்று உணர்த்தி இருக்கிறார் ஆசிரியர்.