தடங்கள்

தடங்கள்
தன் நாய் மற்றும் நான்கு ஒட்டகங்களுடன் ஆஸ்திரேலியப் பாலைவனங்களில் தனியாகப் பயணம் செய்யத் தலைப்பட்டபோது, பைத்தியமெனவும், இறப்பைத் தேடிச் செல்பவர் எனவும், வெட்கமற்று விளம்பரத்தைத் தேடுபவர் என்றும் அழைக்கப்பட்டார். ஆனால், இந்த உற்சாகமான, ஆர்வமூட்டும் நூல் அவர் ஆஸ்திரேலியாவின் நிலப்பரப்பால் கவரப்பட்ட, அந்நிலத்தைச் சார்ந்தவர்களிடம் கருணையுள்ள, தன் முந்தையை அடையாளத்தைத் தொலைக்க விருப்பமுள்ள, மற்ற சாதாரண பிரயாணிகளை விடச் சிறந்தவர் என்பதைச் சுட்டிக் காட்டுகிறது. 130° வெப்பத்தைத் தாங்கிக்கொண்டும், பெருகி ஓடும் நதியைக் கடந்தும், விஷ நாகங்களையும், ஒழுக்கக்கேடான ஆஸ்திரேலிய ஆண்களைத் துரத்தி விட்டுக்கொண்டும், 'ஒட்டகங்கள் மருளும் போது அவற்றின் பின் ஓடிக்கொண்டும், அவை காயமடைந்த போது பேணிக் கொண்டும், டேவிட்ஸன் அசாதாரண தைரியமும், நேர்த்தியான கூருணர்வும்கொண்ட கதாநாயகியாக மிளிர்கிறார். மாறுதலையும் கண்டுபிடிப்பையும் உள்ளது உள்ளபடி உரைக்கும், பாராட்ட வேண்டிய பயணக் காவியம் தான் "தடங்கள்".
துடுக்கும், தாராளமும் நிறைந்தது. படித்தபின் உங்கள் முதுகில் தொத்திக் கொண்டுவிடும் காத்திரமான ஒரு நூலை டேவிட்ஸன் எழுதி இருக்கிறார்.
- சிகாகோ சன் டைம்ஸ்
அவருடைய ஒட்டகங்களைப் போலவே ஒவ்வொரு துளியும் நகைச்சுவை நிரம்பிய, அதே சமயம் தேர்ந்த முதல் ரக எழுத்தாளர்.
-நீயூஸ் வீக்