தமிழில் சைபர் சட்டங்கள்

தமிழில் சைபர் சட்டங்கள்
ம.லெனின் அவர்கள் எழுதியது.
கணிணியைப் பயன்படுத்தாதவர்களே இன்று இல்லை என்று கூறலாம். தானாகவோ தன் பணியாளர் மூலமோ கணினியை மனித குலம் ஏதாவதொரு வகையில் பயன்படுத்திக் கொண்டுதான் வருகிறது. அதனால் ஒவ்வொருவருக்கும் கணினி பயன்பாடு பற்றியச் சட்டங்கள் கட்டாயம் தெரிந்திருக்கத்தான் வேண்டும். சட்டம் தெரிந்திருக்கவில்லை என்பதற்காக சட்டத்தின் கரங்களிலிருந்து உங்களால் தப்பித்துவிட முடியாது. அந்தக் காரணத்திற்காக உங்களுக்கு மன்னிப்பும் கிடைக்காது.அதனால்... சைபர் சட்டம் என்றால் என்ன? அதன் தேவை என்ன? இதை யார் உருவாக்கினார்கள்? எப்படி இந்த சட்டம் நடைமுறைக்கு வந்தது? மற்றவர்கள் இதைப்பற்றி என்ன சொல்கிறார்கள்? இந்தச் சட்டத்தின் பார்வையில் எதெல்லாம் குற்றம்? அதற்கு தண்டனை எவ்வளவு? இதன் பயன் என்ன? பாதிப்பு என்ன ? ஓட்டைகள் என்ன? வேண்டாதவர்கள் இதை உங்கள் மீது பிரயோகித்தால் எப்படிப் பாதுகாத்துக் கொள்வது? என்பதைப் பற்றியெல்லாம் இந்தப் புத்தகம் உங்களுக்கு விளக்கும். நமக்குத் தொல்லை தருபவர்களிடமிருந்து நம்மைத் தற்காத்துக் கொள்ளவும், நம் உரிமைகளைக் கேட்டுப் பெறுவதற்கும், குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வாங்கிக் கொடுப்பதற்கும் நமக்கு சைபர் சட்டங்கள் தெரிந்திருக்க வேண்டும். பல வளர்ச்சியடைந்த நாடுகளே வழிவகை தெரியாது இருந்த நேரத்தில் உலக நாடுகளுக்கெல்லாம் நாம் இந்த சட்டத்தை இயற்றியதன்மூலம் வழிகாட்டியாக இருக்கிறோம். இந்திய மொழிகளில் முதன் முதலில் இந்த சட்டத்தைப் பற்றி முழுமையானதாக வெளிவரும் நூல் இது.