நீங்களும் உங்கள் அலுவலகமும்

நீங்களும் உங்கள் அலுவலகமும்
நிர்வாகம் என்பது யோசித்து கேட்டறிந்து கொண்டு செயல்படுவது. சிறுசிறு செயல்களை உயர்ந்த விதத்தில் செய்வதே நிர்வாகம். நிர்வாகம் என்பது உங்கள் வழியில் செயல்களைப் புரிந்து. ஏனெனில் பல சமயங்களில் நீங்கள் ஒரு பணி விவரப் புத்தகத்தைப் பெறுவதில்லை.
நீங்கள் ஆறாவது குருடரா? வாழ்க்கை விநோதமானது. மிகவும் விநோதமானது. நீங்கள் ஒரு கலர் டிவி வாங்குகிறீர்கள். அதனுடன் ஒரு விவரப் புத்தகததைப் பெறுகிறீர்கள். பிறகு சிறந்த சேவையைப் பெறுகிறீர்கள். ஆனால், நாம் பிறக்கும் போதும, ஒரு வேலையைப் பெறும் பேதும் திருமணம் செய்துகொள்ளும் போதும் தந்தையாக அல்லது தாயாக, பாட்டனாக அல்லது பாட்டியாக மாறும்போது அது போன்ற செயல் விவரப் புத்தகத்தைப் பெறுவதில்லை.
உங்களுக்கு என்று ஒரு சொந்தப் பணி விவரப் புத்தகத்தைத் தயாரித்துக் கொள்ளுங்கள். அது எந்த அளவு மதிப்புடையதாக வேண்டுமானாலும் இருக்கட்டும் உங்கள் சொந்தப் பணி விவரப் புத்தகத்தைத் தயாரித்துக் கொள்ள, இந்தப் புத்தகத்திலிருந்து ஆரம்பியுங்கள். ஒவ்வொருவரிடமிருந்தும் ஒவ்வொரு இடத்திலிருந்தும் சிறுசிறு கருத்துகளைச் சேகரித்து இதனுடன் சேர்த்துக் கொள்ளுஙகள்.