காண் என்றது இயற்கை

காண் என்றது இயற்கை
இந்தக் கட்டுரைகள் இயற்கை குறித்த ஆழ்ந்த புரிதலை ஏற்படுத்துகின்றன. நாம் எவ்வளவோ முறை கண்டு விலகிப்போன இயற்கைக்காட்சிகளை நின்று அவதானித்து துல்லியமாக அடையாளம் காட்டிப் புரிந்துகொள்ள வைக்கின்றன. இயற்கை குறித்த ஈடுபாடும் லயிப்புமே அகவிடுதலையின் ஆதார உணர்வுகள் என்பதைச் சுட்டிக்காட்டுகின்றன, இயற்கை எப்போதுமே கற்றுத்தருகிறது. எல்லா வடிவத்திலும் நம்மைச் களிப்புறச் செய்கிறது அதன் அடையாளமே இந்தக் கட்டுரைத் தொகுதி
இயற்கையை, கால நேரமின்றிப் பார்த்துப் பார்த்து அலுக்காதவனே நல்ல கலைஞனாயிருக்கிறான். தாகூரின் வழிபாடும். வெளிப்பாடும் எல்லாமே இயற்கை சார்ந்தவைதான். பிரபஞ்சத்துடனான மானசீக உரையாடலை இயற்கையின் புலனாகாத பல ஊடகங்கள் வழியாகவே நாம் நடத்தியாக வேண்டியிருக்கிறது. ராமகிருஷ்ணனுக்கு, பிரபஞ்சத்தின் மூளையாக, உடலாக,பறவையும் மிருகமும், மலையும், செடி கொடியும், எறும்பும், சிறு செடியும், பெரு நிழலும், மழையும், நதியும் இயற்கைப் பருண்மையாக, அந்த உரையாடலுக்கான எல்லாச் சாத்தியங்களையும் வழங்கியிருப்பதை இந்தத் தொகுதியில் நன்றாக அனுபவிக்க முடிகிறது.