சொன்னால் முடியும்

சொன்னால் முடியும்
தான் வாழும் சுகமான வாழ்க்கையே எல்லோருக்கும் கிடைத்திருப்பதாக பலர் நினைக்கின்றனர். ஆனால், படி நிலைகளோடு இருக்கும் நம் சமூகத்தில் பலருடைய வாழ்க்கை வேறாக இருக்கிறது. அதிகாரங்களினால் உருவாக்கப்படும் அவலங்களை காலந்தோறும் அனுபவித்து வருபவர்கள் ஏராளம். அவர்களின் வாழ்வில் மாற்றம் ஏற்பட சமூக சிந்தனையாளர்கள் பலர் தங்கள் சொல்லையும் செயலையும் பயனுறு வகையில் வெளிப்படுத்தி வருகின்றனர்.
அத்தகைய சிந்தனையாளர்களில் ஒருவர்தான் ரவிக்குமார். தன்முனைப்புடன் சமூகச் செயல்களைப் புரியும் ரவிக்குமார், தமிழ் நவீன இலக்கிய உலகில் ஒடுக்குமுறைக்கு ஆட்பட்ட மனிதர்களின் வாழ்வை மட்டுமே கருப்பொருளாகக் கொண்டு எழுதிவருகின்றார். அரசு நிறைவேற்றவேண்டிய கடமைகளைச் சுட்டிக்காட்டுவதோடு, அவற்றுக்கான செயல் திட்டங்களையும் முன்மொழிவதே எழுத்துச் சாதுர்யம்.
அப்படிப்பட்ட இவரது எழுத்து ஜூனியர் விகடன் இதழில் சிந்தனை பகுதியில் வெளிப்பட்டது. அதன் முதல் தொகுப்புதான் இந்நூல்.
இலங்கைத் தமிழர்களை பாதிப்பிலிருந்து எவ்வாறு காப்பாற்ற வேண்டும்? தாழ்த்தப்பட்டோருக்கான சிறப்புக்கூறுகள் திட்டத்தை அரசு செயல்படுத்தாதது ஏன்? கல்பாக்கம் மற்றும் கூட