சிவாஜி வென்ற சினிமா ராஜ்ஜியம்

சிவாஜி வென்ற சினிமா ராஜ்ஜியம்
சிறியவர்கள் பெரியவர்களை மதித்துப் போற்றிப் புகழ வேண்டும் .அப்போதுதான் வளர்வார்கள் .அந்த வகையில் சிவாஜி ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழ்கிறார். தன்னுடன் நடிக்கும் சக நடிகர்களை ஊக்குவித்து எதவுவதற்கும் தயங்க மாட்டார். திருவளையாடல் படத்தில் புலவராக வரும் சிவாஜியோடு தருமி யாக வரும் நாகேஷ் தர்க்கம் புரியும் ஒரு காட்சி வரும்.இதை உடுத்து முடித்துவிட்டு படத்தை பார்க்கும் போது ,சில ஷாட்டுகளில் டயமிங் குடன் வசனம் பேசி நடிப்பதில் சிவாஜியை முந்தியிருப்பார் நாகேஷ்.இதைக் கண்ட இயக்குனர்,எடிட்டிங்கில் குறைத்தோ நீக்கிவிட்டு சிவாஜிக்கு முக்கியத்துவம் கொடுக்க எண்ணி அவரிடம் கூறினார்.இதற்கு மறுத்து "வேண்டாம் .நாகேஷ் நல்லா பண்ணியிருக்கான்.அப்படியே இருக்கட்டும் "என்று சொல்லிவிட்டார்."திருவளையாடல்" படத்தில் குறிப்பிட்ட காட்சி இன்றும் இப்படியே இருப்பதை பார்க்கலாம். நம் திறமையில் உறுதியாக இருக்கும் போது அடுத்தவரைப்பற்றி நாம் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை எனும் கொள்கை பொண்டவர் சிவாஜி .நல்ல அனுபவப்பட்ட நாடக சினிமா நடிகர்கள் இப்படி கூறுவார்கள்:"சிவாஜி வாலியைப் போன்றவர்.மேக்கப் போட்டுக் கொண்டு நடிப்பதற்காக அவர் முன்னால் போண் நின்ற மாத்திரத்திலேயே நம்முடைய பாதித் திறமை அவர் பக்கம் போய்விடுகிறது.அத்துடன் நமக்கு ஒரு தாழ்வு மனப்பான்மையும் உண்டாகிவிடுகிறது!"