சயனம்

Price:
250.00
To order this product by phone : 73 73 73 77 42
சயனம்
பல முகங்களையும், பரிமாணங்களையும் கொண்ட கிராமிய வாழ்வை எவ்வித இட்டுக்கட்டுதலுமின்றி அதன் இயல்பிலேயே சொல்லிக் கடக்கிறார் வா.மு. கோமு. கலாச்சாரப் போர்வையை கிழித்தெறிந்து விட்டு பாலியல் தன் வேட்கையை நிறுவுகிறது. பேராசை, பெரும்பசி என இவைகளே வாழ்க்கையை நிரப்பிக் கொண்டிருக்கின்றன. மைய நீரோட்டத்துக்கு ஏற்றாற்போல் தன் முகங்களை மாற்றிக் கொள்ளும் மனிதர்கள், வாழமுடியாத வாழ்க்கையை வாழ்ந்து விடத் துடிக்கும் மனிதர்கள் என சூழ்நிலைகளே விதியை தீர்மானிக்கிறது என்பதனை திரும்பத் திரும்ப உணர வைக்கிறார்கள். கூலிப்பிரச்சனை, வர்ணப்பிரச்சனைகளை பேசிய கிராமிய நாவல்கள் மத்தியில் இவரது தளம் வேறுபட்டதாகவே தொடர்கிறது. நேர்த்தியான பாத்திரப்படைப்புகள் வழியே சமகால கொங்கு கிராமிய வாழ்வு முழுமையாக பதிவாகியிருக்கும் நாவல் சயனம்.