சஹீர் (மஞ்சுள்)

சஹீர் (மஞ்சுள்)
"அபரிமிதமான திறமை அசர வைக்கும் தனித்தன்மை, அற்புதமான வார்த்தை ஜாலம்! சமீர் இவற்றையெல்லாம் விஞ்சி நிற்கும் ஒன்று” 'லாஸ் ஏஞ்சலீஸ் டைம்ஸ்' பத்திரிகை
செஹீரின் வர்ணனையாளர், பாரீஸ் நகரில், பணமும் பிரபலத்துவமும் கொண்டுவருகின்ற அனைத்துச் சிறப்புச் சலுகைகளையும் அனுபவித்துக் கொண்டு மகிழ்ச்சியாக வாழ்ந்து வருபவர். பத்து ஆண்டுகள் அவருடன் வாழ்க்கை நடத்திய அவருடைய மனைவி எஸ்தர், ஒரு போர்முனைச் செய்தியாளர். அவள் தன்னுடைய நண்பன் மிக்காயிலுடன் சேர்ந்து திடீரென்று காணாமல் போய்விட்டிருக்கிறாள். மிக்காயில் அவளுடைய காதலனாக இருக்கலாம் அல்லது அப்படி இல்லாமலும் இருக்கலாம்.
எஸ்தர் கடத்திச் செல்லப்பட்டாளா, கொலை செய்யப்பட்டாளா, அல்லது தனக்குத் திருப்தியளிக்காத ஒரு திருமண உறவிலிருந்து அவள் வெறுமனே தப்பிச் சென்றுவிட்டாளா? செஹீசின் வர்ணனையாளரிடம் இதற்கான எந்த விடையும் இல்லை, மாறாக, ஏராளமான கேள்விகள் அவருடைய மனத்தில் முளைக்கின்றன. பிறகு ஒரு நாள், மிக்காயில் அந்த வர்ணனையாளரைக் கண்டுபிடித்து, அவரை அவருடைய மனைவியுடன் சேர்த்து வைப்பதாக அவருக்கு வாக்குக் கொடுக்கிறான். காணாமல் போன ஒரு காதலை மீண்டும் கைவசப்படுத்துவதற்கான தன்னுடைய முயற்சியில், அந்த வர்ணனையாளர், தான் சிறிதும் எதிர்பார்க்காத, தன்னைப் பற்றிய ஏதோ ஒன்றைக் கண்டறிகிறார்.
ஒரு வெறித்தனமான காதலைப் பற்றிய, நம்முடைய மனத்தைக் கிளர்ந்தெழச் செய்கின்ற ஒரு கதையான 'சஹீர்', நம்முடைய கனவுகளை நனவாக்குவதற்கோ அல்லது அவற்றை அழிப்பதற்கோ வெறித்தனமான பற்றுக்கு இருக்கின்ற சக்தியை ஆய்வு செய்கிறது.
தமிழில்: நாகலட்சுமி சண்முகம்