சாதியும் சமயமும்

சாதியும் சமயமும்
சமயமும் சாதியும் இன்றையத் தமிழ்ச் சமூகத்தில் ஆழமாக வேரூன்றிவிட்டன. தனிமனித வாழ்க்கை எல்லையைக் கடந்து அரசியல், கல்வி இலக்கியம், பண்பாடு என்ற அனைத்து நிலைகளிலும் ஊடுருவி நிற்கிறது.
இது திடீர் நிகழ்வல்ல கடந்த கால வரலாற்றைத் திரும்பிப் பார்த்தால் இதற்கான அடித்தளம் நீண்டகாலமாகப் போடப்பட்டு வந்தமை புலனாகும். கடந்தகால வரலாற்றுச் செய்திகளுக்கும் நிகழ்கால சமூகவியல், அரசியல் செய்திகளுக்கும் இடையே ஒரு நெருக்கமான பிணைப்பு உள்ளது.
சமூகப் பொது வெளியில் தலைவிரித்தாடிய சமய சாதிய வெறியாட்டத்தை நம் முன்னோர்கள் அனைவரும் ஏற்றுக்கொண்டவர்களுமல்வர், அதற்குப் பயந்து ஒதுங்கியவர்களுமல்லர். அதை எதிர்த்துப் போராடியவர்களை நம் கடந்த கால வரலாறு நமக்கு அறிமுகம் செய்கிறது. இப்போராட்டத்தில் நண்பர்கள் யார்? பகைவர்கள் யார்? என்பதை நாம் இனங்காண உதவுகிறது ஒற்றுமைக் கூறுகளையும் வேற்றுமைக் கூறுகளையும் வேறுபடுத்திக் காட்டுகிறது.
இவ் வரலாற்றுண்மையை நாம் புரிந்து கொள்ள இந் நூலில் உள்ள எட்டு கட்டுரைகளும் துணைபுரிகின்றன.