புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் (பரிசல்)

புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் (பரிசல்)
சாகித்திய அகாதெமி பரிசு பெற்ற நூல்
புதுக்கவிதை, ஆரம்பகாலம் முதலே பலத்த எதிர்ப்பு, பரிவிப்பு, கண்டனம். கேலி, குறைகூறல் ஆகியவற்றுக்கு இடையிலேதான் வளர வேண்டியிருந்தது. அக்காலத்திய இலக்கிய ஏடுகளில் விவாதங்களும் நிகழ்த்துள்ளன. அந்தாளையப் பத்திரிகைகள் இன்றைய ரசிகர்களுக்கும் இலி வரவிருக்கும் இலக்கியப் பிரியர்களுக்கும் கிடைக்கக்கூடியன அல்ல. ஆகவே, விவாதக் கட்டுரைகளை இவ்வரலாற்றில் நான் விரிவாகவே எடுத்து எழுதியிருக்கிறேன். அதேபோல, முக்கியமான கவிதைகளைக் குறிப்பிடுகையில் ரசிகர்களுக்குப் பயன்படும் லிதத்தில் அக்கவிதைகளை முழுசாகவே தந்திருக்கிறேன். இம்முறை ரசிகர்களுக்கும் இலக்கிய மாணவர்களுக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளோர்க்கும் மிகவும் உதவியாக இருப்பதை நான் பின்னர் பலர் கூறக்கேட்டு அறிந்து மகிழ்வுற்றேன். இது புதுக்கவிதை வரலாறுதான். புதுக்கவிதைகள், கவிஞர்கள் பற்றிய விமர்சனமோ ஆய்வுரையோ அல்ல. புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் வருஷ ரீதியில் தொகுந்து எழுதப்பட் டுள்ளன. இதில் போகிறபோக்கில் அங்கங்கே சிற்சில இடங்களில் எனது அபிப்ராயங்களையும் மேலோட்டமாகக் குறிப்பிட்டிருக்கிறேன். பாரதிக்குப் பிறகு தனி மலர்ச்சி காட்டிய 'வசன கவிதை' சில பேர்களது முயற்சியோடு குன்றி, 1940களுக்குப் பிறகு ஒரு தேக்கநிலையை எய்தியிருந்தது. பல வருஷங்களுக்குப்பிறகு 'எழுத்து' இலக்கிய ஏடு தோன்றியதும், புதுக்கவிதை புத்துயிர்ப்பும் புதுவேகமும் பெற்று ஓங்கி வளர்த்தது. எனவே புதுக்கவிதை வரலாற்றில் 'எழுத்துக்கு பெரும் பங்கும் முக்கிய இடமும் உண்டு. அதனால்தான் இக்கட் டுரைகளில் 'எழுத்து' கால சாதனைகளுக்கு நான் அதிகமான கவனிப்பு கொடுக்க நேர்ந்தது. 'தீபம்' பத்திரிகையில் இக்கட் இரைகள் பிரசுரமாகிக் கொண்டிருந்தபோதும், அதன்பின்னரும், “பல இடங்களிலிருந்தும்முக்கியமாகக் கல்லூரிகளிலிருந்து பாராட்டுக்கள் கிடைத்து வந்தன. இவ்வரலாறு புத்தகமாக வரவேண்டும்; இலக்கிய மாணவர்களுக்கும் ஆராய்ச்சி செய்கிறவர்களுக்கும் பயனலிக்கும் என்ற கருத்தும் தொடர்ந்து கூறப்பட்டு வந்தது.