ஈதேனின் பாம்புகள்

Price:
60.00
To order this product by phone : 73 73 73 77 42
ஈதேனின் பாம்புகள்
சமகால ஈழக் கவிதைகளின் பொது இயல்பிலிருந்து முற்றிலும் வேறுபட்ட கவிதைக் குரல் றஷ்மியுடையது. காவு கொள்ளப்பட்ட வாழ்வைச் சொல்லும் இந்த கவிதைகளின் இழப்பின் ஓலத்தையும் கையறுநிலையின் புலம்பலையும் மீறி மனித இருப்புக்கான சினமும் இருப்பின்மையின் சீற்றமும் வெளிப்படுகின்றன. ஆக்கிரமிப்பால் சிதறடிக்கப்பட்ட ஓர் இனத்தின் பழிவாங்கல் றஷ்மியின் கவிதைகளின் கொடூரக் காட்சிகளாகவும் வன்முறைச் சொற்களாகவும் பதிவாகின்றன. பனி வாளால் கீறப்பட்ட மென்மையான இதயத்தின் வடுக்கள் இந்தக் கவிதைகள்.