புதியவராய்... வெற்றியாளராய்... மாறுங்கள்
புதியவராய்... வெற்றியாளராய்... மாறுங்கள்
ம.லெனின் அவர்கள் எழுதியது.
உங்களைப் புதியவராய்.. வெற்றியாளராய்.. மாற்றிக் கொள்ள வேண்டும் என்ற ஆவல் உங்களுக்குள் இருக்கும். ஒரு குறிப்பேடும் பேனாவும் மட்டும் போதும்.. உங்களை இன்னொரு புது மனிதராய் எங்களால் மாற்றிக் காட்ட முடியும் என்று சொன்னால் உங்களுக்கு அதை நம்புவது கடினமாக இருக்கும். நீங்கள் இந்த புத்தகத்தை சொல்லப்பட்டுள்ள சின்னசின்ன பயிற்சிகளை செய்துபார்த்தால் போதும். அது சாத்தியமாகும். அதை நீங்கள் எவ்வளவு எளிதாக செய்ய முடியும் என்பதும் இதில் விளக்கிப்பட்டு இருக்கிறது. ஆங்காங்கே கொடுக்கப்பட்டிருக்கும் எடுத்துக்காட்டுக்கள் வெறும் கற்பனை இல்லை என்பது இந்நூலின் மற்றொரு சிறப்பு. இதுவேண்டுமா? இங்கே கிடைக்கும். அதை அடைவதற்கு இது தான் வழி. இப்படி தெளிவாக உங்களை கையைப் பிடித்து அழைத்துப் போகிற இந்த புத்தகத்தைப் படிக்கும் முன் உங்களுக்கு ஓர் அன்பான எச்சரிக்கை. இதை படிக்க ஆரம்பித்த பிறகு நீங்கள் நேற்று இருந்த மனிதராய் நிச்சயமாக நாளைக்கு இருக்கப்போவதில்லை. நீங்கள் எப்படி இவ்வாறு அடியோடு மாறிப்போய் விட்டீர்கள் என்பதை உங்கள் சுற்றமும் நட்பும் வியப்போடு பார்க்கப் போகிறது. உங்கள் மாற்றம் உங்களை மட்டுமல்லாது உங்களைச் சுற்றியுள்ள எல்லாருக்கும் நன்மை தருவதாக அமையப் போகிறது.இந்த வரவேற்கத்தக்க மாற்றம் உங்கள் வாழ்க்கையை அடியோடு புரட்டிப் போட இருக்கிறது. இதைத்தானே நீங்கள் விரும்பினீர்கள்? முற்றிலும் புதியவராய், வெற்றியாளராய் , சாதனைகள் பலவற்றை படைப்பவராய் ஆகப்போகும் உங்களுக்கு எங்களது வாழ்த்துக்கள்
புதியவராய்... வெற்றியாளராய்... மாறுங்கள் - Product Reviews
No reviews available