பெரிய வயல்

பெரிய வயல்
எம்.எஸ் சண்முகம் அவர்கள் எழுதியது.
நிலமும் பொழுதுமாக இருந்த மக்களின் வாழ்க்கை மழை, புயல், இயற்கைச் சூழல் என விரிவடைகிறது.கரு, உயிரினங்கள், பயிரினங்கள் , தெய்வம் , உணவு என்பவை அனைத்துமே ஒருவிதத்தில் நமது தொன்மை மிகுந்த கருத்தாக்கங்கள் தாம். இவையே காலம் செல்லச் செல்ல நகரம், ஆட்சி, தொழில்,போராட்டங்கள் என படிப்படியாக விரிவடைகின்றன.இந்தப் பார்வையுடனே பெரிய வயல் நாவலும் விரிகிறது. கதைபோடும் பெரிய வயல் ச.தமிழ்ச்செல்வன், கோணங்கி ச.முருகபூபதிக்கும் ஆதி வயல் கதைநிலமாகும். பெரிய நாவல் எம்.எஸ்.சண்முகத்தின் இரண்டாவது நாவல்.ஏற்கனவே பூட்டுப்பாம்படம் சிறுகதைத் தொகுதிக்குப் பின் முதல் நாவலாக நிலம் மறுகும் நாடோடி யும் வந்தது. பெரிய வயல் நாவல் ஆப்பநாடு இருட்டில் அரிக்கேன் விளக்கு கட்டிய வண்டியில் கிழக்கத்தி மாடுகள் பூட்டிய அசோகன் காலச் சக்கிரங்கள் இன்றுவரை மாறாமல் சுழலும் ரோட்டில் வருகிறார்களட திசை காவலர்கள் காடுகாக்க.