பங்குச் சந்தையில் பணம் பண்ணலாம்

பங்குச் சந்தையில் பணம் பண்ணலாம்
எண்களின் விளையாட்டில் பணத்தை சம்பாதிக்கிற கலை என பங்குச் சந்தை முதலீட்டைச் சொல்வார்கள். சென்செக்ஸ், நிஃப்டி எனப்படும் இந்தக் குறியீட்டு எண்களைப் புரிந்துகொண்டவர்களுக்கு இது சொர்க்கம்; புரியாமல் பறிகொடுத்தவர்களுக்கு இது நரகம். நாம் உழைக்காமல், நம் சார்பில் நமது பணத்தை உழைக்கச் சொல்லி சம்பாதிக்கும் ஒரு முதலீடே பங்குச் சந்தை முதலீடு! வெறுமனே ஏறுகிற பங்கில் பணத்தைக் கட்டி கோடிகளைக் குவித்துவிட முடியாது. அது கிட்டத்தட்ட ஓடுகிற குதிரை மீது பணத்தைக் கட்டும் குருட்டுத்தனமான சூதாட்டம் போன்றது. பங்குச் சந்தையில் பணம் சம்பாதிக்க என்னென்ன விஷயங்கள் தெரிந்திருக்க வேண்டும், அதை எப்படித் தெரிந்து கொள்ளலாம், ஒரு பங்கினை வாங்குவதற்கு முன்னால் எதையெல்லாம் பார்க்க வேண்டும், நம் முதலீடு நமக்கு லாபம் ஈட்டித் தருவதற்கு என்னென்ன செய்ய வேண்டும் என எல்லா விஷயங்களையும் சொல்லும் கைடு இது! இந்த நூலைப் படித்தால், ‘பங்குச் சந்தை’ என்ற வார்த்தையையே புதிதாகக் கேள்விப்படுகிறவர்கள்கூட தேர்ந்த முதலீட்டாளராக மாற முடியும். ‘குங்குமம்’ இதழில் வெளிவந்த தொடர், பிறகு நூல் வடிவம் பெற்றிருக்கிறது. நூலைப் படியுங்கள்; உங்கள் பணத்தை பெருகச் செய்யுங்கள்.