ஃபேன்டஸி கதைகள்

Price:
125.00
To order this product by phone : 73 73 73 77 42
ஃபேன்டஸி கதைகள்
ஒரு சத்துப்பானத்தைக் குடிக்கத் தேவையில்லாமல், ஏறி சுற்றினாலே குழந்தைகள் திடீரென உயரமாகிவிட முடிகிற மந்திர ராட்டினம்... தினமும் மூன்று டேங்கர் லாரி தண்ணீர் குடித்துத் தீர்க்கிற அதிசய மனிதன்... டி.வியில் செய்தி வாசிக்கும் பெண்ணின் கழுத்து நகைகளைத் திரைவழியாக இழுத்துவிடுகிற மாயகாந்தம்... ஒருவர் பேசும் வார்த்தைகளைத் திருடிக்கொண்டு, திரும்பவும் அந்த வார்த்தைகள் அவர்களின் வாயில் வராமலே செய்துவிடும் செல்போன்... வீடியோ கேமில் ஊர்ந்து–வரும் பாம்புகள் திடீரென கேம் ஆடியவனின் வீட்டுக்குள் புகுந்து–கொண்டு செய்–யும் அட்டகாசங்கள் எனக் குழந்தைகள் மட்டுமின்றி, இளைஞர்கள், பெரியவர்கள் என எல்லோரையும் வசீகரிக்கும் எழுத்து நடையும் கற்பனையுமாக இந்தக் கதைகள் விரிகின்றன..