ஊர்ப் பழமை...

ஊர்ப் பழமை...
கொங்குச்சீமையில் இருக்கும் உடுமலைப்பேட்டைக்கு அருகாண்மையில் உள்ள அந்தியூர் எனும் சிற்றூரில் பிறந்த பழமைபேசி (எ) மெளன.மணிவாசகம் அவர்கள், வேளாண்மைத் தொழில் புரியும் கிராமங்களின் மூலை முடக்கு, மேடு பள்ளம், படுகை பாம்பேறி, களத்துமேடு கட்டுத்தறி என கிராமத்தின் சகல இடங்களையும் வலம் வந்தவர். கோயம்புத்தூரில் இயந்திரவியல், மற்றும் கனடா நாட்டில் உள்ள டொரோண்டோ நகரின் யார்க் பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியல் துறையில் பட்டம் பெற்றவர். சிங்கப்பூர், மலேசியா, இந்தோனேசியா, ஜெர்மனி, இசுரோல்,சைப்ரசு, கனடா போன்ற நாடுகளில் பணிபுரிந்துவிட்டு, தற்போது அமெரிக்காவில் இருக்கிறார். மேலைநாடுகளில் தொடர்ந்து இருந்து வந்தாலும் கூட, கிராமியத்தின் தொன்மைகளை அணு அணுவாக அனுபவித்து இரசித்ததின் பொருட்டு, எப்போதும் தம்மைஒரு கிராமத்தானாகவே அடையாளப்படுத்திக் கொள்பவர். தமிழ் மொழியின்பாலும், தமிழ்பண்பாட்டின்பாலும் மாறாப் பற்றுக் கொண்டவர். கிராமியத்துப் பற்றியங்களையும், தமிழின் பெருமைகளையும் www.pazamaipesi.com எனும் வலைதளத்தில் எழுதி வருகிறார்.