நீ நதி போல ஓடிக்கொண்டிரு...

நீ நதி போல ஓடிக்கொண்டிரு...
தாம் எட்டாத உயரங்களை வாழ்க்கையின் ஒட்டத்தில் கரைந்து போன தம் கனவுகளை தன் பிள்ளைகள் மீது சுமத்துவது தமக்கு கிடைக்காத அங்கீகாரத்தை பிள்ளைகள் மூலம் பெறுவது அதற்காக அவர்களை அதீதமாக வருத்துவது வெல்லும் பிள்ளைகளோடு சதா ஒப்பிடுவது... இவை யெல்லாம் இன்று பெற்றோரை பிடித்திருக்கும் மன வியாதியின் கூறுகளே !
"ஒரே நதியில் நாம் இருமுறை குளிக்க முடியாது என்கிறது ஒரு ஜென் வாசகம் குழந்தைகளுடன் பிணைந்த நம் வாழ்வ ஒரு நதி போன்றது அது கடந்து சென்றப்பின் அதை நாம் ஒரு போதும் பெற முடியாது அந்தத் குறுகிய காலத்தில் அவர்களை வெற்றி பெற ஊக்கப்படுத்துவது மிக முக்கியம் ஆனால் மிக மெதுவாக அந்தத் பாத்திரம் கொள்ளும் அளவே அதில் நம் கனவுகளை ஊற்றுவோம்
அதைவிட நமக்கு முக்கியம் அவர்களோடு பேசுவது அவர்களை அறிவது அவர்களுடான நமது உரையாடல்களில் நாம் இழந்த நமக்குள் இருக்கும் குழந்தைத்தன்மையை மீட்டெடுப்பது அவர்களின் இயல்பான திறமைகளை கண்டுப்பிடிப்பது அந்தத் திறமை ஒளிர உதவி செய்வது ஒரு திறமையும் இல்லாவிட்டாலும் என் அன்பு உனக்கு நிச்சயம் என்று உறுதிப்படுத்துகிறது அந்த உறுதியின் உற்சாகத்தில் எழுந்து நிற்கும் அவர்களின் உயரங்களை ஆசீர்வதிப்பது ....இவை மட்டுமே!