பாலைகள் நூறு

பாலைகள் நூறு
மரங்கள் யாவும்
இலைகளை இழந்திருந்தன. அடுத்த வசந்தம் a prime c
இனி
காத்திருக்க வேண்டியதுதான்.
இலைகளை இழந்த மரங்கள், மேகங்களைக் கூட்டி அப்புறப்படுத்த, விளக்குமாறாக நின்றன.
பிறகுதான்
சூரியன் மெதுவாகத் தயங்கி, முகில் புகாரினூடாக எட்டிப்பார்க்க முயலும்
சூரியனை முழுமையாக இங்குதான் கண்டேன். திரண்டெழுந்த பனிப்புகார்களின் இடையே அதன் வட்டவடிவமான வெள்ளிவிளிம்புகளுட சூரியனைக் கண்ணில்
எந்தக் கூச்சமுமின்றிக் கண்டேன்.
எனினும்,
என் மனதில் சிறிது குழப்பம்தான் எஞ்சுகிறது. என்மேல் துயர் படிந்திருக்கிறது.
நகரம் முழுவதும், வீதிகள் வரையும், புல்வெளிகள் யாவும், சிறு மரம் செடிகொடிகள் மேலும், கூரைகளிலும், காரின் மேற்கூரைத் தகட்டிலும். சுண்ணாம்பு பூசியதுபோலப் நானும் நிற்க விரும்பினேன்.
பனித்துகள்கள் படிந்திருக்கக் கண்டேன். அவ்வாறே நானும் ஆகினேன்.
ஒன்றும் பேசாமல் மொட்டைமரமாக, பனிக்காலத்து மரமாக