நூறும் எழுபதும்

நூறும் எழுபதும்
திராவிட இயக்கச் சிந்தனையில் - பகுத்தறிவுப் பாதையில் துணியுடன் இயங்குதற்கும் - மரபுப் பாவில்தான் எழுதுவேன் என்று உறுதிபூண்டு எழுதிக் கொண்டு இருப்பதற்கும் அருமை நண்பர் 'வாசல், எழிலனை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
முத்தமிழ் அறிஞர் கலைஞரின் சாதனைகளைத் தெளியாகவும் விளக்கமாகவும் நூறு நேரிசை வெண்பாவில் பாடியுள்ளார், அப்பகுதிக்குக் 'கருணா நிதி நூறு என்றும் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்தம் சாதனையைத் தெளிவுபடுத்தி எழுபது வெண்பாவையும் இயற்றி - அப் பகுதிக்குத் 'தளபதி எழுபது' என்றும் பெயரிட்டுள்ளார். காரணம் கலைஞர்க்கு அகவை நூறு தளபதிக்கு அகவை எழுபது என்பதனை நினையூட்டுவதற்காக இவ்வாறு அமைத்து மொத்தமாக "நூறும் எழுபதும்" என்று இணைப்புப் பெயரை அமைத்துள்ளார். மரபுப்பா இயற்றுபவர் இன்று விருத்தப் பாவை மட்டுமே இயற்றுகின்றனர். ஆசிரியப்பா, வெண்பா, கலிப்பா, வஞ்சிப்பா என்று எந்த வகைப் பாவினையும் தொடுவதில்லை. இருக்கின்ற பாஅமைப்பிலேயே மிகக் கட்டுக் கோப்பான இலக்கண விதியினைக் கொண்டது வெண்பா தான், அந்த வெண்பாவில் மிக எளிதாக, இனிதாகப் படிக்கச் சுவை பயப்பதாக இயற்றி அளித்திருப்பது மன நெகிழ்ச்சியைத் தருகின்றது.