மேகங்களே நிலாவை நகர்த்துகின்றன

Price:
250.00
To order this product by phone : 73 73 73 77 42
மேகங்களே நிலாவை நகர்த்துகின்றன
குழந்தைப் பருவம் துர்சொப்பனங்களாலும் கழிவிரக்கங்களாலும், மனோ விகாரங்களினாலும் கண்ணீரினாலும் நிரம்பியது என்றே நவீனத் தமிழிலக்கியம் எப்போதும் சொல்லி வருகின்றது. அப்படி அல்ல என்று தன் 'நிலாக்கள் தூர தூரமாக' சுயசரிதையின் மூலம் நிரூபித்தவர் பாரததேவி.
இது போன்ற கொண்டாட்டமான குழந்தைப்பருவ சுயசரிதையை இதற்குமுன் நான் வாசித்ததேயில்லை: அதன் தொடர்ச்சியாக தனது சுயசரிதையின் இரண்டாம் பாகத்தை 'மேகங்களே நிலக்களை நகர்த்துகின்றன' என்று எழுதியிருக்கிறார்.
இன்றிலிருந்து முப்பது ஆண்டுகளுக்குமுன் மனிதர்களும் வாழ்வும் அதன் மேன்மை கீழ்மையோடு கெண்டைக்காலில் புழுதி படிய அசலாய் திரண்டு வருகிறார்கள் இச்சுயசரிதையில்,