நான் நாகேஷ்

0 reviews  

Author: எஸ்.சந்திரமெளலி

Category: வரலாறு

Available - Shipped in 5-6 business days

Price:  275.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

நான் நாகேஷ்

எழுதியவர்  எஸ்.சந்திரமெளலி அவர்கள்

திரைப்படத்துக்கு வெளியே நாகேஷ் நடித்ததில்லை. மனம் திறந்து அதிகம் பேசியதும் இல்லை. உடன் நடித்தவர்கள் பற்றியும், இயக்கியவர்கள் பற்றியும், திரைப்பட அனுபவங்கள் பற்றியும் அவர் இதுவரை பகிர்ந்துகொண்ட விஷயங்கள் சொற்பமே. அவையும்கூட அவர் துறையைப் புரிந்துகொள்ள உதவியிருக்கிறதே தவிர, அவரைப் புரிந்துகொள்ள அல்ல. நாகேஷின் பவ்யமும் தன்னை வெளிக்காட்டிக்கொள்ளாத சுபாவமும் அவரது விஸ்வரூபத்தை மறைக்கும் அம்சங்கள். தமிழ் திரையுலகை நாகேஷ் திட்டவட்டமாக ஆண்டிருக்கிறார். எம்.ஜி,ஆர்., சிவாஜி தொடங்கி ரஜினி, கமல் வரை அனைவரும் ஒப்புக்கொண்ட ஒரு விஷயம் இது. நடிப்பின் அத்தனை சாத்தியங்களையும் அவர் கற்று, கடந்து சென்றிருக்கிறார். அவரை நேசிக்காத, அவரைக் கண்டு பிரமிக்காத, அவரிடம் இருந்து கற்காத யாரும் இங்கே இல்லை. இது நாகேஷ் பற்றிய புத்தகம் அல்ல. நாகேஷின் புத்தகம். எம்.ஜி.ஆர், வாசன், சிவாஜி, திருவிளையாடல், கமல்ஹாசன் (கமா, கமா போட்டு இன்னும் சேர்க்கலாம்) என்று தன் வாழ்வின் மறக்கமுடியாத மனிதர்களையும் சம்பவங்களையும் நாகேஷ் இதில் பிரத்யேகமாக நினைவுகூர்கிறார். இதுவரை நாம் சந்தித்திராத ஒரு புதிய நாகேஷ் இந்த அனுபவங்களின் வாயிலாக உருப்பெற்று நிற்கிறார். கல்கியில் தொடராக வெளிவந்து, வாசகர்களின் உற்சாகமான வரவேற்பையும் ஆதரவையும் பெற்ற அபூர்வமான அனுபவங்கள்.

.

நான் நாகேஷ் - Product Reviews


No reviews available