மிளகாய் ஹோம நாயகி ப்ரத்யங்கிரா தேவி

மிளகாய் ஹோம நாயகி ப்ரத்யங்கிரா தேவி
அன்னை ப்ரத்யங்கிராதேவியைப்பற்றி இப்போது பிரபலமாகப் பேசுகிறார்கள். அவளது கோயிலுக்கு ஆயிரக்கணக்கில் பக்தர்கள் படையெடுக்கிறார்கள். ஆனால், அவள் திடீரெனத் தோன்றியவள் அல்ல. அந்தக் காலத்தில் மகான்களும், தாந்திரிகம் கற்றவர்களும் ப்ரத்யங்கிராதேவியைப் பூஜித்து வந்திருக்கிறார்கள். எதிரிகளை வெல்வதற்கு பத்ரகாளியான ப்ரத்யங்கிராதேவியின் அருள் அவசியம் என்று வேத சூட்சுமம் கூறுகிறது. மன்னர்களும்கூட வழிவழியாக இவளை ஆராதித்து வணங்கினார்கள். சோழர்கள் காலத்தில் ப்ரத்யங்கிராவுக்கு நிறைய கோயில்கள் இருந்திருக்கின்றன. சம்பவாமி யுகே யுகே என்ற தத்துவப்படி, குரோதமும் வன்முறையும் துரோகமும் நிறைந்த இந்தக் கலியுகத்தில், நல்லவர்களின் பக்கத்தில் துணையிருக்கவேண்டிய அத்தியாவசியத்தின் காரணமாக, நமது நன்மைக்காக, உலக க்ஷேமத்துக்காக ப்ரத்யங்கிராதேவி கருணையுடன் அவளாகவே இப்போது ஈர்க்கிறாள். நம்மை ஏந்தி அள்ளிக்கொள்ளத் தயாராகக் காத்திருக்கிறாள். ஓர் அடி அவளை நோக்கித் தவழ்ந்தால் போதும். ஓடோ டிவந்து எடுத்துக்கொள்ளும் தாய், தயாபரி அவள். இந்நூலில் ப்ரத்யங்கிராதேவியின் வரலாறு, அவதார நோக்கம், அசுரர்கள் வதம் மற்றும் வழிபாட்டு முறைகள், அவள் குடிகொண்டிருக்கும் திருக்கோயில்கள், துதிக்கப்படும் நாமாவளிகள், தேவியைப்பற்றிய பரவசமூட்டும் தகவல்கள் என சகலமும் அடங்கியிருக்கின்றன