பூ மழை தூவி
"ஒரு குழந்தை பிறக்கும் போது இதற்கு நேர் எதிரானது நிகழ்குறது. ஒரு குழந்தை பிறந்தவுடன் அதைச் சுற்றியுள்ள ஒளிவட்டம் வெளியே பரவ ஆரம்பிக்கிறது. அது அதன் தொப்புளில் இருந்து அரம்புக்கிறது. ஒரு குளத்தில் ஒரு கல்லை எறியும் போது அதில் தண்ணீர் வட்டங்கள் வளர்ந்து கொண்டே போவது போன்று ஒளி வட்டமானது பரவுகிறது ; குழந்தை சுவாசிக்கும் ஆராம்பிக்கும் போது அது தொப்புள் மையத்தை தாக்குகிறது. அப்போது அமைதியாக உள்ள குளத்தில் முதல் கல் எறியப்படுகிறது. அதைத் தொடர்ந்து தண்ணீர் வட்டங்கள் வெளியே பரவிக் கொண்டே செல்கின்றன."
"உங்களது வாழ்க்கை முழுவதும் நீங்கள் ஒளி வட்டத்தை பரப்பிக் கொண்டே செல்கிறீர்கள். கிட்டத்தட்ட முப்பத்து ஐந்து வயதில் அந்த ஒளிவட்டம் அதன் உச்சத்தை அடைந்து நிறைவு பெறுகிறது. அதன் பிறகு குறைய ஆரம்பிக்கிறது. ஒரு மனிதன் இறக்கும் போது அது திரும்பவும் தொப்புளுக்குள் சென்று விடுகிறது. அது தொப்புளை அடையும் போது அது ஒரு கெட்டிப்படுத்தப்பட்ட சக்தியாக குவிக்கபபட்ட ஓர் ஒளியாக ஆகிவிடுகிறது. நீங்கள் அமைதியாக இருந்தால் உங்களால் அதை உணர முடியும்"