மருந்தில்லா மருத்துவம் (நக்கீரன்)

மருந்தில்லா மருத்துவம் (நக்கீரன்)
டாக்டர் F.A அப்துல் நாசரி
பேராசிரியர் டாக்டர் FA அப்துல் நாசர், பாரம்பரிய மருத்துவ முறைகளில் மிகுந்த அனுபவம் உள்ளவர் சீன வைத்தியமான அக்குபஞ்சர் சிகிச்சையில் உலக மாற்று மருத்துவமுறை பல்கலைக்கழக மருத்துவ நகளால் M.D. (Acu), M.D. (Am), நரம்பியல் சம்பந்தப்பட்ட ஆய்வுக்காக Ph.D மற்றும் International visiting professor தகுதியைப் பெற்றவர். தமிழக அரசின் அங்கீகாரம் பெற்ற DNYS, தமிழ்நாடு சித்த மருத்துவக் கவுன்சில அங்கீகாரம் பெற்ற DPTV சித்தவர்மம், மற்றும் அலோபதியின் மகுந்தியல் துறையான B.Pharm முதலிய படிப்புகளை முடித்துள்ளார். உளவியல் துறையில் M.S (Psy) பயின்றுள்ளார். நோயாளிகளுக்கு மருந்து இன்றி நம்பிக்கையையே மருந்தாகக் கொடுத்து நோய்களை குணமாக்குகிறார்.
கி.பி 2030-க்குள் அக்குபஞ்சர், அக்குபிரசர், மற்றும் உணவு மருத்துவம் மூலம் நோயில்லல, மருந்தில்லா உலகம் படைப்பதே தன் நோக்கமாகக் கொண்டு 2004-ல் இருந்து 2010-வரை சுமார் 1200-க்கும் மேற்பட்ட இலவச அக்குபஞ்சர், அக்குபிரசர் உணவு மருத்துவம் விழிப்புணர்வு முகாம்களை தன் IBIM மாணவர்களின் ஒத்துழைப்புடன் தமிழ்நாடு முழுவதும் வெற்றிகரமாக நடத்தி வருகிறார்.
இவர் பாரம்பரிய மருத்துவ முறையில் அதிகமான ஆய்வு நூல்களைத் தரும் முயற்சியின் முதலடியாய் இந்நூலை எழுதியுள்ளார். அதுவே முதிர்ந்த அனுபவ முத்திரைபோல் சிறப்பாக அமைந்துள்ளது.