பார்க்கின்ஸன்ஸ் பயங்கரம்

பார்க்கின்ஸன்ஸ் பயங்கரம்
மனித உடல் இயக்கத்துக்கு மிகவும் அவசியமானது டோபாமைன் என்ற வேதிப்பொருள்.மூளை செல்களில் உற்பத்தியாகும் இந்த வேதிப்பொருளின் அளவு குறையும்போது,பார்க்கின்ஸன்ஸ் நோய் ஏற்படுகிறது. ஜாதி,மதம், ஏழை, பணக்காரன் என்ற பாரபட்சம் பார்க்காமல் அனைவரையும் பாதிக்கக்கூடிய இந்தப் பார்க்கின்ஸன்ஸ் நோய், நல்ல திடகாத்திர மான இளைஞரைக்கூட குடுகுடு கிழவரைப்போல் தள்ளாத நிலைக்கு ஆளாக்கிவிடும். கை நடுக்கம், தசை இறுக்கம் போன்றவை பார்க்கின்ஸன்ஸ் நோயின் ஆரம்பக்கட்ட அறிகுறிகள். இவற்றை உடனடியாகக் கவனித்து சிகிச்சை எடுத்துக்கொண்டால் நோயைக் கட்டுக்குள் வைக்கலாம். நடுக்குவாதம் என்ற இந்த நோயினால் பாதிக்கப்பட்டவர்கள், நோயின் தன்மையைப் புரிந்துகொண்டு இறுதிகாலம்வரை அனுசரித்து வாழவேண்டிய முறைகளை இயல்பாக விளக்கியுள்ளார் நூல் ஆசிரியர் டாக்டர் ஏ.வி.ஸ்ரீனிவாசன். பொம்மலாட்டம்போல் ஆகிவிடுகின்ற வாழ்க்கைச் சூழலில், பார்க்கின்ஸன்ஸ நோயாளியின் ஒவ்வோர் அசைவுக்கும் அடுத்தவருடைய உதவி தேவைப்படுகிறது.அதாவது, சிகிச்சையைக் காட்டிலும் நோயாளிகளுக்குத் தேவை அன்பும் அரவணைப்பும்தான் என்பதை ஆணித்தரமாகக் கூறியுள்ளார் ஸ்ரீனிவாசன்.