உடலே நலமா

உடலே நலமா
நாற்பது வயதைத் தொட்டு விட்டீர்களா? கவனம்! எப்போதாவது லேசாக நெஞ்சு வலிப்பதுபோல் இருக்கிறதா? ஒரு பக்கம் மட்டும் விட்டுவிட்டுத் தலைவலி, எகிறும் ரத்தஅழுத்தம், ஷுகர் - இன்னும் என்னென்னவோ இருக்கலாம்!எல்லாவற்றுக்கும் எடுக்கவேண்டும்,டெஸ்ட்! எதற்கு, என்ன டெஸ்ட்? ஏன் இந்த டெஸ்ட்? எப்படிச் செய்கிறார்கள்?டாக்டருக்குத் தெரிந்தால் போதாது!உங்களுக்கும் அவசியம் தெரிந்திருக்க வேண்டும்!அதற்குத்தான் உதவுகிறது இந்நூல்.மனிதனுக்கு வரக்கூடிய அத்தனை உபாதைகளுக்கும் உரிய பரிசோதனைகள் குறித்து மிக எளிமையாக விளக்கும் நூல் இது!அச்சப்படவே வேண்டாம்! இந்த ஒரு நூலைப்படித்துவிட்டால், டாக்டர் எந்தப் பரிசோதனைக்கு எழுதிக்கொடுத்தாலும் உங்களுக்கே அது எதுவென்று புரிந்துவிடும்! உங்களைப் பாதி டாக்டர் ஆக்குவதல்ல இதன் நோக்கம். மாறாக முழு ஆரோக்கியத்துடன் வாழ்வதற்கான விழிப்புணர்வை இந்நூல் அவசியம் உண்டாக்கும்