மறக்க முடியாத மனிதர்கள் - தமிழருவி மணியன்
மறக்க முடியாத மனிதர்கள் - தமிழருவி மணியன்
தமிழருவி மணியன் அவர்கள் எழுதியது
அறிவார்ந்தவர்களும் தன்னலம் துறந்தவர்களும் தேச நலனில் நாட்டமுள்ளவர்களும் தொண்டு மனம் கொண்டவர்களும் மட்டுமே ஒரு கால கட்டத்தில் அரசியல் உலகில் ஆர்வத்துடன் அடியெடுத்து வைத்தனர்.
தியாகம் தன்னல மறுப்பு வேவை மனப்பான்மை எளிமை அடக்கம் ஆகியவை காந்திய யுகத்தில் பொது வாழ்வின் அடிப்படைப் பண்புகளாகப் போற்றப்பட்டன.
தம்மிடம் இருப்பதை இழப்பதற்காகவே அன்று அரசியல் உலகில் ஒவ்வொருவரும் அடியெடுத்து வைத்தனர். இன்று சகல தளங்களிலும் சமூகத்தைச் சுரண்டிச் கொழுப்பதற்காகவே பல பேர் அரசியல் வேடம் புனைந்து பொய் முகத்துடன் போலித் தலைவர்களாக வலம் வருகின்றனர்.
சமூக பிரக்ஞை உள்ள இளைஞர்கள் இனியும் மெளனப் பார்வையாளர்களாக இருப்பது நம் நாட்டிற்கு நல்லதல்ல. அடிமை இந்தியாவில் ஆயுதம் தேவைப்பட்டிருக்கலாம். சுதந்திர இந்தியாவில் காந்திய வழியில் அறப்போர் மூலம் ஆயிரம் மாற்றங்களை நாம் நினைத்தால் அரங்கேற்ற முடியும். இந்த மேலான உணர்வைத் தூண்டுவதுதான் இந்த நூலின் நோக்கம்
மறக்க முடியாத மனிதர்கள் - தமிழருவி மணியன் - Product Reviews
No reviews available