லிங்க விரல்
லிங்க விரல்
லிங்க விரல், கவிஞர் வேல்கண்ணன் அவர்களுடைய மூன்றாவது கவிதைத் தொகுப்பு. பாம்புகள் மேயும் கனவு நிலம், இசைக்காத இசைக்குறிப்புகள் இவருடைய மற்ற பிற கவிதைத் தொகுப்புகளாகும்.
***
ஞாபகங்களின் படுகையில் நேற்று மலையாய் இருந்தவை இன்று கடலாய் இருக்கின்றன சிப்பிகளுக்கும் நுரைத் திவலைகளுக்கும் பேதம் தெரியாத கடலோ வனமாய் இடம்பெயர்ந்திருக்கிறது. வானொலியின் முட்கள் இடையே பிசிறடிக்கும் காலத்திற்கும் பிக்சல் காலத்தின் அலைபேசி காத்திருப்பு நேரக் குரலுக்கும் நுண் இழை ஒன்றை எடுத்து தம் காலத்தை நெய்து கொள்கின்றன இந்த கவிதைகள். இன்மைக்கும் நிரப்பிகளுக்கும், ஒன்றுக்கும் பின்னங்களுக்கும் தசமங்களுக்கும் இடைப்பட்ட தூரங்களை பல்லாங்குழி நிரப்பும் கூழாங்கல் என மிக நறுவிசான சொற்களால் ஆடிக் கடக்கும் வித்தையை பயில்கிறது இந்த விரல் மௌனம், ஒலி, ஓசை, இசை, முனகல், பேச்சு வெவ்வேறு மாத்திரை அளவு கொண்டவை இத்தொகுப்பின் கவிதைகள் தம் கருப்பொருட்களின் தன்மைக்கு ஏற்ப அவற்றின் தொனியை மாற்றிக் கொள்கின்றன. பிரக்ஞை, கனவு, நினைவு. ரகசியம், கூக்குரல் என்ற நிரலும் நெருக்கமானது.
- கவிஞர் நேசமித்ரன்
லிங்க விரல் - Product Reviews
No reviews available