இலட்சுமணப்பெருமாள் கதைகள்

இலட்சுமணப்பெருமாள் கதைகள்
இலட்சுமணப்பெருமாள் அவர்கள் எழுதிய சிறுகதைகள்
முன்னுரையில் கி.ரா..
இலட்சுமணப்பெருமாளுக்கு கதைசொல்ற நேர்த்தி பிடிபட்டிருக்கு. இவருடைய கதைகளை இப்பதாம் நான் முதமுதல்ல படிக்கிறேன். என்னமாப் படம் பிடிக்கிறார் விசயங்களை. வடு கதையில வருகிற வள்ளிக்கிழவிய மறக்க முடியல. அவ புருசன என்னமா வையிரா!. வையிரதெல்லம் செல்லும் இன்னுங்கூட வையலாம் அந்தப் பெரியாளை. இப்படிக் கிழங்களைப் பாத்து ரொம்ப நாளாச்சி கீகாட்டுத்தாத்தான்னு ஒருத்தர் ஒட்டுப்படை ங்கிறகதையில வர்றார். படிச்சித்தாம் அதத் தெரிஞ்சிக்கணும் நீங்க. கிழடு கட்டைகளுக்கும் என்னல்லாம் பிரச்சனைகள் இருக்கும்ன்னுட்டு. கதைசொல்லியின் கதையின் முதல் பாராவே என் தோள்மேல் கைபோட்டு இழுத்துக்கொண்டது. சில் என்ற வாழைமட்டையில் உட்காரவைத்து பளிங்குத்தரையில் வழுக்கிக் கொண்டு போகும்படியாய் இலட்சுமணப்பெருமாள் என்னை இழுத்துக் கொண்டு ஒடினார். பஜனை மடங்களும் புராண இதிகாச சிந்தனைகளும் உள்ள எனது மக்களைப் பார்த்து எத்தனை வருச்களாகி விட்டன. எனது போனவிலிருந்து எப்படியோ தப்பிவிட்டார் இந்த பாராயணம் கெங்கவ நாயக்கர் கதைகயைப் படித்து முடித்தும் உணர்ச்சிவசப்பட்டேன். ஊர்மிளைக்காகவும் லட்சமியம்மாவுக்காகவும் கண்ணீர் கசித்தேன்.