உயிர்த்தண்ணீர்
உயிர்த்தண்ணீர்
ஆசிரியர் இக்கதைகளை பூச்சிப் புனைவுகள் அற்ற தன் மண்ணின் மொழியில் படைத்திருக்கிறார்
கோட்பாட்டு ரீதியாக இதை மீறல் மொழியாக வகைப்படுத்தினாலும் களைத்திறன் மிக்கதாய் இவர் நெய்திருக்கும் பாமர நேர்த்திகளுக்கு இந்த மொழியை பொருத்தமும் அழகும் தருவதாக இருக்கிறது இதன் ஓர்மையை சிமிட்டி தரையை நீர் கொண்டு கழுவினால் அழகு மண் தரையை சாணமிட்டு மெழுகினால் தான் அழகு என்று நமக்குச் சொல்லத் தோன்றுகிறது
மண் சார்ந்த மொழியை கண்காணிக்கும் முன்னேற கடந்த ஒரு தலைமுறைக்கும் மேலாக சில முற்போக்கு இலக்கியவாதிகள் பயன்படுத்தி வந்துள்ளனர் அவர்களின் சிலர் இவரை விடவும் தங்கள் படைப்பின் கடைசல் வேலைகளில் கைகோர்ந்தவர்களாய் இருக்கக்கூடும் இதில் இவருக்கு உள்ள தனித்துவமானது இவர் எதை எழுதுகிறாரோ அதுவே இருக்கிறார் என்பது இவருடைய எழுத்தை வட்டார மொழியான சொல்வது ஒரு வசவோடு கூடிய வகை படுத்தல் மாதிரி மார்க் வைத்து வேப்பங்காயை அரைத்து தடவிய பின்னும் ஒட்டா ரமாக கசக்க உறிஞ்சி குடித்த முலைப்பாலில் உரிய மண்மொழி இது
இத்தொகுப்பில் தவிர்க்க இயலாது வெளிப்படும் மரபான சாதி அடையாளம் அல்லாமல் வேறு சந்தர்ப்பங்களில் சாதி பேசும் உந்துதலை படைப்பாளி முற்றுமாக தொலைந்து இருக்கிறார் என்பது கவனத்திற்குரிய அம்சம்
இக்கதைகளை நிகழ்காலம் ஒரு சிற்றோடும் அதன் சுற்றியுள்ளையுமாக ஒற்றைத் தலமாய் இருப்பது சிலருக்கு குறையாக படலாம் ஒரு படித்தாலும் மக்கள் ஒரு படித்தான மொழிகள் என்று அதை குறிக்கிப் பார்க்கவும் முற்படலாம் பல்வேறு காலங்களும் வெவ்வேறு புத்திகளும் ஆக எழுதும் தளத்துக்கு கண்மணி இன்னும் வரவில்லை அல்லது வளரவில்லை என்பது அவரது நம்பகத்தன்மைக்கான வலிமையாகவே அமைகிறது இத்தொகுப்பை பற்றி கவிஞர் அறிவுமதி கண்மணியின் செம்பன் காட்டைச் சேர்ந்தவர் சொல்கிறார்
நடுமுள்ளங்கி நெல் விளையும் சதுப்பு நிலம் நெல்வேலியான் புண்ணியத்தில் ஈச்சங்காடாகி ஈச்சங்காடு இரண்டாவது சுரங்கத்தால் இன்று மண்மேடாக போனது போல் போக இருக்கும் அந்த பொட்டங்காடு வாழ்வின் மிச்சங்களை தப்பு முந்திரி பொறுக்குவது போல் சேகரித்து இருக்கிறான் தம்பி கண்மணி
ஆக அழிவின் விளிம்பில் நிற்கும் தன் மண்ணின் மரண வாக்கு மூலத்தை கலை நேர்த்தியோடு ஆவணப்படுத்திக் கொண்டிருக்கும் ஒரு இலக்கியம் இந்தக் கண்மணி இவருக்கு அந்த தகுதி உண்டு என வாக்குமூலம் தருவது இத்தொகுதி.
உயிர்த்தண்ணீர் - Product Reviews
No reviews available