காதல் மன்னனும் காவிய மன்னனும் (வாலி எழுதிய ஜெமினி படப் பாடல்கள்)
ஜெமினி என்னோட நெருங்கிய நண்பர் வி.கோபாலகிருஷ்ணன் மூலமாகத்தான் ஜெமினியை எனக்குத் தெரியும் சினிமாவுக்கு வாறதுக்கு முன்னாடி ஜெமினி திருச்சி ஜாவர் சீதாராமன் நாடகத்துல சின்னச்சின்ன வேஷத்துல நடிச்சிட்டு இருந்தாரு. நான் எழுதின 'இதயத்தில் நீ' படத்துக்கு அவாதான் ஹீரோ. படம் பெரிசா போசுல. ஆனா பாட்டு நல்லா இருந்ததுன்னு எனக்குப் போன் பண்ணி பாாட்டினார்.
ஆனால் அந்தப்படம் உனக்கு பெரிசா உதவி பண்ணலேன்னு பிறகு வருத்தப்பட்டார். என்னுடைய முன்னேற்றத்தில் மிகுந்த அக்கறை காட்டினார். அப்புறம் 'கற்பகம்' படத்துல எல்லாப் பாடல்களும் ஹிட ஜெமினி எம்.ஜி.ஆருக்கு ஜூனியர், சிவாஜிக்கு சீனியர் ஆனால் அவர் நடிப்பு இரண்டு பேர் பாணியும் இல்லாமல் இருந்தது அவரின் "கல்யாணப் பரிசு', 'மணாளனே மங்கையின் பாக்கியம்', 'சுமைதாங்கி" மறக்கமுடியாத படங்களாகும்.
ஏவி.எம்., 'மிஸ்ஸியம்மாவை இந்தியில் எடுத்தார். அதிலும் ஜெமினி தான் ஹீரோ, ஜெமினிகணேசனுடைய தபால்தலை வெளியிடப் பட்டபோது தயாநிதிமாறன் அந்தத் துறை அமைச்சராக இருந்தார், கலைஞர் என்னை வெளியிடச் சொல்லி ஜெமினியுடன் கதாநாயகி யாக நடித்த அஞ்சலிதேவி, வைஜயந்திமாலா, ஈரோஜாதேவி, பத்மினி, கே.ஆர்.விஜயா எல்லோரும் வாங்கிக்கொண்டார்கள்.
வாலி
காதல் மன்னனும் காவிய மன்னனும் (வாலி எழுதிய ஜெமினி படப் பாடல்கள்) - Product Reviews
No reviews available