ஃப்ளாஷ்பேக்

ஃப்ளாஷ்பேக்
கடந்துவந்த பாதையை திரும்பிப் பார்ப்பது எல்லோருக்கும் பிடித்தமான ஒன்று. வெற்றியாளர்கள் தங்களை திரும்பிப் பார்க்கும் போது ஏற்படும் அனுபவம் அலாதியானது. திரைப்படத்துறைக்குள் நுழைபவர்கள் அனைவரும் திரைவானில் ஜொலிப்பவர்கள் அல்ல. திறமையும், வாய்ப்புகளும் ஒருங்கே அமைந்தால் மட்டுமே அவர் நட்சத்திரமாக மின்னுவார். அந்த வகையில் இயக்குநர் பாண்டிராஜ் திரைவானில் ஒளிவீசும் நட்சத்திரமாக உள்ளார். அவரது வாழ்வனுபவமே இந்த ஃப்ளாஷ்பேக். நம் பார்வையில் இருந்து மறைந்து போன டூரிங் டாக்கீஸ், வானொலி, கொரங்கு பெடல் என பல்வேறு விஷயங்களை நம் நினைவுகளில் மேலெழும்பச் செய்கிறார் பாண்டிராஜ். முதல் அத்தியாயம் முதல் கடைசி அத்தியாயம் வரை ஒரு சினிமா இயக்கும் சிரத்தையோடுதான் ஒவ்வொரு பதிவையும் பகிர்ந்திருக்கிறார் நூல் ஆசிரியர். ‘எழுத்து என்பது தியானம் போல. அது நம்மையே நமக்கு புதியதாய் காட்டும்’ என்பதே இந்த ‘ஃப்ளாஷ்பேக்’ மூலம் நான் உணர்ந்தது என நெகிழும் பாண்டிராஜ், இந்தப் புத்தகத்தில் நம்மை பல இடங்களில் பரவசப்படுத்துகிறார். படியுங்கள்... பரவசமடைவீர்கள்.