புலமையும் இளமையும் (வாலி எழுதிய சிவக்குமார் படப் பாடல்கள்)
வாலி என் அண்ணன்.
ஓவியக் கல்லூரியிலும் எனக்கு முன்னோடி: திரையுலகிலும் எனக்கு முன்னோடி
செந்தூரப் பொட்டும் சிரிப்பும் அவர் சொத்து.
'நான் தொழிலில் வென்று வாழ்க்கையில் தோற்றவன்" என்று ஒரு பேட்டியில் தன்னைப்பற்றி வாலி சொன்னார்.
எல்லாம் பெற்றவன் என்று இவ்வுலகில் எவனும் இல்லை என்பதை அவரும் அறிவார்.
என் நூல் வெளியீட்டு விழாவில் என்னையும் என் துணைவியையும் வாழ்த்தி என் பிள்ளைகளை தன் பிள்ளைகளாக ஏற்றுக்கொண்ட என் மூத்த சகோதரர் வாலி,
அவதாரபுருஷன், பாண்டவர் பூமி, ராமானுஜ காவியம், கிருஷ்ணவிஜயம் போன்றவை காலம் கடந்தும் அவர் புகழை நிலைநிறுத்தும் படைப்புகள்.
-சிவகுமார்