இந்தியன் ஆவது எப்படி?
இந்தியன் ஆவது எப்படி?
தமிழில்: எஸ். கிருஷ்ணமூர்த்தி
இந்தியாவுக்கு சுதந்தரம் 1947ல் கிடைத்தது. அதைத் தொடர்ந்து காலனிய யுகம் மெள்ள முடிவுக்கு
வந்தது. ஆனால், காலனிய சக்திகளின் தாக்கம் கலாசாரத்தளத்தில் இன்றும் நீடித்து வருகிறது.
இன்றும் தாய் மொழியில் பேசத் தெரியாமல் இருப்பது பெருமிதமாகப் பார்க்கப்படுகிறது.
இந்தியாவின் இணைப்பு மொழியாக ஆங்கிலம்தான் இருந்துவருகிறது. இன்றும் இந்திய கட்டடங்கள்
மேற்கத்திய பாணியில்தான் கட்டப்பட்டு வருகின்றன. இன்றும் இந்தியத் திரைப்படங்களில்
பெரும்பாலானவை ஹாலிவுட்டைக் காப்பி அடித்துத்தான் எடுக்கப்படுகின்றன. நாஜிக்
கொடுமைகள் பற்றி எடுக்கப்படும் படங்களை வாய் பிளந்து ரசிக்கும் நம்மால், பிரிவினைக் கால
சோகம் பற்றி உருப்படியாக ஒரு படம் கூட எடுக்க முடியவில்லை.
உஸ்தாத் அம்ஜத் அலிகானைப் பார்த்து நீங்கள் எந்த இசைக்கருவியை இசைக்கிறீர்கள்? என்று
கேட்பவர்தான் பிரிட்டனின் கலாசார உறவுகளுக்கான மிக உயர்ந்த பதவியில் இருக்கிறார். இந்த
வீழ்ச்சி எப்படி ஏற்பட்டது? இன்னும் சொல்லப்போனால், இந்த வீழ்ச்சி நம்மால் உண்மையில்
உணரப்பட்டிருக்கிறதா? நேற்றைய காலனிய சுனாமியின் அடுத்த அலையாக உலகமயமாக்கல் இன்று
நம்மை மூழ்கடிக்க ஆரம்பித்திருக்கிறது. இதில் இருந்து இந்தியா எப்படி மீள முடியும் என்பதை
ஆசிரியர் கலை, கலாசாரத் துறையில் நாம் அடைந்த உச்சத்தையும் இன்றைய நிலையையும் ஒப்பிட்டு
எழுதியிருக்கிறார்.
உலகத் தலைமையை ஏற்பது குறித்த நம் கனவுகள் நனவாகவேண்டுமென்றால், முதலில் இந்தியனாக
நாம் ஆகவேண்டும் என்ற முக்கியமான கடமையை ஆசிரியர் தெளிவாக விளக்கியிருக்கிறார்.
இந்தியன் ஆவது எப்படி? - Product Reviews
No reviews available