இல்லம் இனிக்க அரவணைக்க வேண்டிய ஆறே உறவுகள்
இல்லம் இனிக்க அரவணைக்க வேண்டிய ஆறே உறவுகள்
கதைகள், திரைப்படங்களில் பொதுவாக மாமியாரை வில்லிகளாகச் சித்தரிப்பது காலாகாலமாகத் தொடர்கிறது. மாமியார் உடைத்தால் மண்குடம்; மருமகள் உடைத்தால் பொன்குடம் ; மனசுக்கு பிடிக்காத மருமகள் கைபட்டால் குற்றம்; கால் பட்டால் குற்றம் -இப்படி ஒரு குடும்பத்தில் வருகிற சிக்கல்கள், சண்டைகள் எல்லாவற்றுக்கும் மாமியாரோ- மருமகளோதான் காரணம் என்பதாக ஒரு மனச்சி்த்திரம் உருவாக்கப்பட்டிருக்கிறது. ஆனால் இது எவ்வளவு தூரம் நிஜம்? நிச்சயமாக நூறு சதவிகிதம் சிஜம் என்று சொல்லதுமுடியாது! ஒரு குடும்பத்தின் மொத்த உறவே ஆறுதான்! மாமனார், மாமியார், மருமகன்,மருமகள், மைத்துனன், மைத்துனி - இதுதான் ஒரு குடும்பத்தின் மொத்த உறவுமே! எல்லா மனிதர்களுக்குள்ளும் நல்லதும் இருக்கும் ; குழறகளும் இருக்கும் அந்த குறைகளைப் புரிந்து, அவர்களை அரவணைத்துப் போக எந்த இடத்தில் விட்டுக் கொடுத்து, பிரச்சனைகளை எழாமல் தடுப்பது என்பதற்கு எளிமையான சின்னச் யோசனைகளைச் சொல்லும் அரிய நூல்! இப்படிப்பட்ட அரவணைக்கப்பட வேண்டிய ஆறு உறவுகளை அருமையாகப் பபேணி, குடும்பத்தைக் கோவிலாக வைத்திருக்கும் அனுபவசாலி கவிஞர் தெய்வச்சிலை இந்நூலை ஆழ்ந்த அனுபவத்தில் எழுதி இருக்கிறார்.குடும்ப உறவுகள் ஈகோ பிரச்சனைகளால் சிதைந்து வரும் இன்றைய சூழலில் உறவுகளை உறுதியாக்க உதவும் நூல்இது!.
இல்லம் இனிக்க அரவணைக்க வேண்டிய ஆறே உறவுகள் - Product Reviews
No reviews available