இட்லி, ஆர்கிட், மணஉறுதி!

இட்லி, ஆர்கிட், மணஉறுதி!
விட்டல் வெங்கடேஷ் காமத் அவர்கள் எழுதியது.
தமிழில்: சித்தார்த்தன் சுந்தரம்.
பணம் முழுவதையும் பிடுங்கிக்கொண்டு என்னை நடுத்தெருவில் நிறுத்திவிட்டான். அதனால் தற்கொலை செய்துகொள்வதைத் தவிர, எனக்கு வேறு வழி தெரியவில்லை. கடவுள் எனக்கு ஆற்றலையும் துணிவையும் தந்ததால் எல்லா சதிகளையும் முறியடித்து வீறுகொண்டு எழுந்தேன். வாழ்க்கையே பறிபோய்விட்ட இந்த மாதிரி தருணத்தை எத்தனை பேர் அனுபவித்திருப்பார்கள்? ஏமாற்றத்துக்கும் தோல்விக்கும் ஈடுகொடுக்க முடியாமல் எத்தனை போர் பலியாகியிருப்பார்கள்? நான் நம்பிக்கை மிகுந்தவன் . ஆக்கபூர்வமாக சிந்திப்பவன். அதனால் எழுந்து மண்ணைத் தட்டிவிட்டுக் கொண்டேன். ஆனால், எத்தனை பேரால் இது முடியும்? எழுநதிருக்க முடியாமல் பலியாகுபவர்களுக்கு, ஆக்கபூர்வமாக சிந்திக்கவும் நம்பிக்கையை ஏற்படுத்திக்கொள்ளவும் தூண்டுகோலாக இருக்க விரும்பிய இந்த நூலை எழுதினேன் என்கிறார் ஆசிரியர்.