எதிர்பாராத பரிசு
எதிர்பாராத பரிசு
இம்மாதிரி, ஒரு குறிப்பிட்ட புத்தகத்தை வாசித்த அத்தனை பேரின் வாசக அனுபவங்களையும் தொகுத்து இன்னொரு புத்தகமாக வெளியிடும் முயற்சியில் சுந்தர் துணிந்து இறங்கியிருப்பது எனக்கு வியப்பளித்த விஷயம். இம்மாதிரியான தொகுப்பு நூல்கள் தமிழில் இதுவரை மிக மிக அரிதாகவே – மொத்தமே இரண்டோ மூன்றோதான் வந்திருப்பதாக எனக்கு நினைவு – வெளியாகியிருக்கின்றன.
அந்த வகையில், இது ஒரு முன்மாதிரியான முயற்சி. இது வெல்ல வேண்டும். வாசகர்கள் எத்தனை விதங்களில் இந்த நூலை அணுகியிருக்கின்றனர் என்பது வியப்பளிக்கும் ஒன்று. பெற்றோர்கள், ஆசிரியர்கள், சாதாரண வாசகர்கள், பாட்டி-தாத்தாக்கள் -இவ்வளவு பேரும் வெவ்வேறு கோணங்களில் தங்களின் சொந்த அனுபவங்களோடு நூலின் அனுபவங்களை உரசிப் பார்த்து வியந்திருக்கிறார்கள்! இத்தனை பேரின் அனுபவங்களும் சுந்தரின் அனுபவங்களோடு உரசியிருக்கின்றன.
எதிர்பாராத பரிசு - Product Reviews
No reviews available