குரு - ஒரு கண்ணாடி
நீங்கள் குருவிடம் நெருங்கி வரும் போது உங்கள் அன்பில் நம்பிக்கையில் உங்கள் அமைதி ஆழமாகிறது.உங்கள் மெளனம் இறந்து போன ஒன்றைப் போல அல்லாமல் ஒரு மயானத்தின் மெளனமாக அல்லாமல் பாடிக் கொண்டும் ஆடிக் கொண்டும் உயிருடன் இருப்பதாகிறது.நீங்கள் உங்கள் வாழ்க்கையின் முழுமையடைதலை நோக்கி மேலும் அதிகமாக நெருங்கிச்செல்லும் போது உங்கள் வாழ்க்கை மேலும் மகிழ்ச்சிகரமானதாக ஒரு ஆழமான சந்தோஷத்தை காரணம் ஏதுமின்றி ஆகிறது.மிக ஆழமான மற்றும் அபரிமிதமான பேரானந்தம்.இதை நீங்கள் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளத் தொடங்கலாம்.உண்மையில் நீங்கள் அதைப் பகிர்ந்து கொண டாக வேண்டும்.ஏனெனில் அது நிரம்பி வழிகிறது.அதை உங்களால் அடக்கி வைக்க முடியாது.முதல் முறையாக நீங்கள் சிறியவராகவும் உங்கள் பேரானந்தம் முடீவில்லாததாகவும் உள்ளது.இவைதான் நீங்கள் வீடு நோக்கிச் சென்று கொண்டிருக்கிறீர்கள் என்பதன் அடையாளங்கள்.