வெள்ளைக் கமலம்
வெள்ளைத் தாமரை ஒரு அழகிய கின்னம்.வெள்ளை பல்வேறு பரிமாணங்களைக் கொண்டது.வெள்ளை வண்ணப் பட்டைகளின் எல்லா நிறமும் கொண்டது .இது மிகவும் வினோதமானது.வெள்ளையின் நம்ப முடியாத ஒரு தன்மை.அதில் எல்லா நிறங்களும் உண்டு.ஆனால் நிறமற்றுத் தெரியும்.அது சிவப்பல்ல.அது நீளமல்ல .அது பச்சையல்ல.ஆனாலும் அது எல்லா வண்ணங்களையும் தன்னுள் கொண்ட அருமையான கலவை.அப்படியொரு இசைவு...அவையெல்லாம் மறையும்.எல்லா வண்ணங்களும் ஒன்றாகக் கரையும் .ஒன்றானதுதான் வெள்ளை.வெள்ளைதான் அருமையான கலவையின் இசைவின் உச்ச கட்டம்.தாமரை மிகப் பெரிய சின்னம்.குறிப்பாக கிழக்கே.சன்யாசத்தின் தேவையான அர்த்தத்தின் பிரதிநிதிதான் தாமரை.தாமரை ஏரியில் வாழும்.இருந்தும் நீர் அதைத் தொட முடியாது.நீரில் வாழும்.இருந்தாலும் நீர் தொடமலே இருக்கும்.உங்கள் இருப்பை நீங்கள் பார்க்கும் தன்மையின் பிரதிநிதிகள் தாமரை.நீங்கள் இந்த உலகத்தில் வாழ்கிறீர்கள்.ஆனால் நீங்கள் வெறும் சாட்சி பாவம்தான். நீங்கள் உலகத்தில் இருக்கிறீர்கள் இருந்தும் நீங்கள் அதன் ஒரு பகுதியல்ல.நீங்கள் கலந்துகொள்கிறீர்கள் .இருந்தும் நீங்கள் அதன் ஒரு பகுதியல்ல.நீங்கள் வாழ்க்கையின் அமைதியான மெளனமான பார்வையாளனாகிவிட்டால் நீங்கள் சிரிக்கப் போகிறீர்கள் சாதாரண சிரிப்பல்ல....சிங்கத்தின் கர்ஜனை போன்று வயிறு குலுங்கும் சிரிப்பு.பிறகு வெள்ளைத்தாமரை உங்கள்மீது பொழியத் துவங்கும்.
வெள்ளைக் கமலம் - Product Reviews
No reviews available