ஃப்ளாட் நெம்பர் 144 அதிரா அபார்ட்மென்ட் (பாகம் 2)

ஃப்ளாட் நெம்பர் 144 அதிரா அபார்ட்மென்ட் (பாகம் 2)
ஈச்சம்பாக்கம் ஏரியாவில் உள்ள அதிரா அபார்ட்மெண்ட்டுக்கு அந்தப் பகுதியில் வசிக்கும் மக்கள் வைத்திருக்கும் இன்னொரு பெயர் ‘சந்திரமுகி அபார்ட்மெண்ட்”. அவர்கள் அப்படி அழைப்பதற்கு காரணம் அந்த அபார்ட்மெண்டில் நடக்கும் அசாதாரணமான சம்பவங்கள்தான். அதில் சில சம்பவங்கள் அதிர்ச்சியானவை. புதிரானவவை. நம்ப முடியாதவை. அந்த அபார்ட்மென்ட்டில் ஒரு குறிப்பிட்ட ஃப்ளாட்டில் மட்டும் வாடகைக்கு யார் வந்தாலும் சரி, அடுத்த ஆறு மாத காலத்திற்குள் கார்டியோ வேஸ்குலார் ஆக்ஸிடென்ட் CVA எனப்படும் மாரடைப்பு ஏற்பட்டு இறந்து போகிறார்கள். அவை இயற்கையான மரணங்கள் என்பதால் காவல்துறையும் அந்த மரணங்களில் அக்கறை காட்டுவதில்லை. ஆனால்..... கருப்பு பெயிண்ட் பூசப்பட்டு கொலையுண்ட ஒரு இளம்பெண்ணின் உடல் சென்னையின் புறநகர் பகுதியில் கிடைத்த பின்பே போலீஸ் விழித்துக் கொண்டு செயல்படுகிறது அதிரா அபார்ட்மென்ட்டில் உறைந்து போயிருந்த உண்மைகள் வெளிச்சத்துக்கு வருகின்றன. நீங்கள் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கறீர்கள் என்றால் கண்டிப்பாக இந்த கதை உங்கள் தைரியத்தை கொஞ்சம் அசைத்துப் பார்க்கும். யாரோ ஒருவர் உங்களையும் அறியாமல் உங்களை கண்காணிப்பது போன்று உணர்வு தோன்றும். இந்த மெகா நாவல், இரண்டு பாகங்களாக வெளிவந்திருக்கிறது. இது முதல் பாகம். இதைப் படித்தவுடனே, உங்கள் கண்களும் கைகளும் இரண்டாம் பாகத்தை தேடும் என்பதில் சந்தேகமில்லை.