கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி.
கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி.
மு.கோபி சரபோஜி அவர்கள் எழுதியது.
தூத்துக்கடி இணை மாஜிஸ்ட்ரேட்டாக இருந்த ஆஷ் துரை, வ.உ.சி -யையும், அவர் மூலம் எழுந்து நிற்கும் எழுச்சியையும் ஒடுக்க வேண்டும் என்பதில் தீவிரமாக செயல்பட்டான். 'சட்டம் - ஒழுங்கு' என காரணம் காட்டி வ.உ.சி.யை அச்சுறுத்த ஆரம்பத்தான் . 'உன் அச்சுறுத்தல் எல்லாம் கோழைகளிடம் எடுபடும். என்னைப் போன்ற தேசவீரனிடம் எடுபடாது ' என சொல்வதைப் போல துரையின் மிரட்டல்களை எல்லாம் வ.உ.சி. துச்சமெனத் தூக்கி எறிந்தார். அன்று மாலை நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய வ.உ.சி., " இனி என் பெயரில் கலகக் குற்றம் சாட்டப்படும். அவர்கள் சொல்படி நடக்காவிட்டால் என்னைச் சுட்டுத்தள்ள தயாராக இருக்கிறார்கள். ஒரு பெரிய போலீஸ் அதிகாரி, தன் படையோடு வந்து நம்மைச் சுட்டுத்தள்ளும் பட்சத்தில் என்ன செய்ய முடியும்..? என்னைக் கேட்டால், 35 லட்சம் மக்களில் மூவாயிரம் நான்காயிரம் பேர் சுடப்பட்டு இறப்பதால் ஒன்றும் பெரிய இழப்பாகிவிடப் போவதில்லை. அப்படிப்பட்ட சாவு எங்களுக்கு விதிக்கப்பட்டிருந்தால் அதை நானும், சுப்பிரமணிய சிவாவும் ஏற்கத் தயார்! இறப்புக்கெல்லாம் இந்தியன் அஞ்சமாட்டான்! " என வீர முழக்கமிட்டார்.
கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி. - Product Reviews
No reviews available