ஏற்கனவே சொல்லப்பட்ட மனிதர்கள்

ஏற்கனவே சொல்லப்பட்ட மனிதர்கள்
தமிழவன் அவர்கள் எழுதியது. ஏற்கனவே நமக்கும் தெரிந்த தமிழக இந்திய மனிதர்களின் கதையைத்தான் படிக்கப் போகிறோம்.இவர்களை நீங்கள் மன அளவில் மற்றும் எழுத்தளவில் எங்கோ சந்தித்திருக்கலாம்.இப்படிச் சந்தித்த பல பாத்திரங்கள் இங்கு வருகிறார்கள்.ஜானுடைய கனவில் முத்துப்பிள்ளை வெளவாலாய்த் தொங்குகிறார்.கன்னிஜமரியின் வீட்டிலுள்ள விசித்திர செம்புக் கட்டுப்பட்டவராக இருக்கிறான் ராசப்பன்.ஜானின் ஆணுறப்பை பார்க்காத சிறுமியின் கற்பு புகழுக்குரியதாகிறது. எல்லையோரத்துக் கறுப்பு ஜனங்களின் ஆவி புராதனக் குடிமகனான முத்துப்பிள்ளையின் ஆவியுடன் இணைகிறது.குழந்தை பிறப்பதற்காகத் தாய்கக்கு முன்னால் ஜோக் அடிக்கிறார்கள். அந்தக் கிராமமே கனவுகளின் செழிப்பில் லயித்துச் சிரிக்கத் தொடங்குகிறது.மீசைக்காரரான ஒரு கம்யூனிஸ்டு மனம் வெம்பித் தன்னை சாரைப் பாம்புச் சாதி என்று கூறி ஒருநாள் குளத்தில் பிணமாகக் கிடக்கிறார்... இவ்விதத்தில் இந்த நாவல் எழுத்து நம்மிடமிருந்த கதை சொல்லும் மரபை மீண்டும் வெளிக்கொண்டு வருகிறது என்றே சொல்லலாம்.ஓ! ஆச்சரியமாகத்தான் இருக்கிறது.இதை மிகவும் வயதான ஒருபாட்டி அல்லது ஒரு குழந்தை மட்டுமே எழுதியிருக்க முடியும்.