FD en-peyar-sivappu-47125.jpg

என் பெயர் சிவப்பு

0 reviews  

Author: ஓரான் பாமுக்

Category: புதினங்கள்

Stock Available - Shipped in 1-2 business days

Price:  750.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

என் பெயர் சிவப்பு

 ஓரான் பாமுக் அவர்கள் எழுதியது. இவர் நோபல் பரிசு பெற்றவர்.

காலம்:16ஆம் நூற்றாண்டு.களம்: துருக்கியின் தலைநகரான இஸ்தான்புல். ஓட்டாமன் சாம்ராஜ்ஜியத்தின் சுல்தான் மூன்றாம் மூராத் ஹிஜ்ரா சகாப்தத்தின் ஆயிரமாவது ஆண்டுத் தொடக்கத்தைக் குறிக்கும் விழா மலரை உருவாக்க விரும்புகிறார்.ஓட்டாமன் பேரரசின் மகத்துவங்களையும் தன்னுடைய கீர்த்தியையும் பதிவ செய்யும் வகையில் மலரை உருவாக்கும் பொறுப்பை இஸ்தான்புல்லின் நுண்ணோவியர்களிடம் ஒப்படைக்கிறார்.நூலாக்கம் நடந்து கொண்டிருக்கும் தருணத்தில் இரண்டு நுண்ணோவியர்கள் மர்மமான முறையில் அடுத்தடுத்துக் கொல்லப்படுகிறார்கள். முதலில் மெருகோவியன் வசீகரன் எஃபெண்டி.பின்னர் நூலுருவாக்கத்துக்குப் பொறுப்பாளரான எஜிஷ்்.அவர்களைக் கொன்றது யார்? கொலைக்குக் காரணம் என்ன? என்ற கேள்விகளிலிருந்து விரிகிறது நாவல். 12 கதாபாத்திரங்களின் மொழிகளில் முன்னேறுகிறது கதை . நாவலின் இரு புள்ளிகள் காதலும் குற்றமும்.இவற்றை இணைக்கும் கதைக் கோட்டுக்கு மேலும் கீழுமாக மதத்தின் கட்டுப்பாடுகளையும் கலையின் சுதந்திரத்தையும் விவாதிக்கிறார் ஓரான் பாமுக். என் பெயர் சிவப்பு - 2006 ஆம் ஆண்டு இலக்கியத்துக்கான நோபெல் பரிசு பெற்ற ஓரான் பாமுக்கின் தமிழில் வெளிவரும் முதல் படைப்பு.

என் பெயர் சிவப்பு - Product Reviews


No reviews available