எண்ணும் மனிதன்

Price:
275.00
To order this product by phone : 73 73 73 77 42
எண்ணும் மனிதன்
மல்பா தஹான் அவர்கள் எழுதியது கயல்விழி அவர்கள் மொழிபெயர்த்தது
எண்ணும் மனிதனான பெரமிஸ் சமீர் தன் அதீதமான கணிதத் திறனால் சிக்கல்களைத் தீர்க்கிறான். அறிவார்ந்த ஆலோசனைகள் தருகிறான். அபாயகரமன எதிரிகளை வெல்கிறான்.
புகழும் பொருளும் பரிசுகளும் பெறுகிறான். மீண்டும் மீண்டும் வரும் நிகழ்வுகள் வழியே நம்மை ஒரு அற்புதப் பயணம் அழைத்துச் செல்கிறான். அவனுடன் செல்லும் நாம் முன்னர்
வாழ்ந்த புகழ்பெற்ற கணித அறிஞர்களின் வரலாற்றை அறிகிறோம். மதிநுட்பம் மிகுந்த மனிதர்களின் கேள்விகளை அவன் தன் ஞானத்தாலும் நிதானத்தாலும் எதிர்கொள்ளக் காண்கிறோம்
தன்னைத் தேடிவந்தவர்களின் சிக்கல்களை தீர்க்கமான அறிவால் தீர்த்து அவர்களது அன்பையும் மதிப்பையும் பெறக்காண்கிறோம். சொல்லப்பட்ட விதத்தால் இக்கதைகள் வாசகனுக்கு
ஒரு அரிய அனுபவமாகின்றன.