கிறுக்கு ராஜாக்களின் கதை
தன் கணவனின் கொலைக்காக வஞ்சம் வைத்து ஓர் இனத்தையே அழித்த ஓர் அரசி. முட்டாள்தனமான பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் தம் மக்கள் பட்ட துன்பத்தில் மகிழ்ந்த ஓர் அதிபர். அடுத்த வேளை உணவுக்கு மக்கள் வழியின்றித் தவிக்கையில் தனக்குத்தானே முடிசூட்டி மகிழ்ந்த ஒரு தலைவர். இறந்துபோன ஆட்சியாளரின் பிணத்தை ரகசியமாக வைத்து அரசியல் ஆட்டம் காட்டிய ஒரு ராணி. தம் வாழ்நாளில் 1171 பிள்ளைகளுக்கு தகப்பனாகி, பெருஞ்சாதனை புரிந்த ஒரு சுல்தான். மதவாதத்தாலும் மூடநம்பிக்கைகளாலும் தேச மக்களை அடிமைப்படுத்தி அராஜகம் செய்த ஒரு சர்வாதிகாரி. இன்னும் இன்னும்... இந்தப் புத்தகம், இப்படிக்கூட இந்த மண்ணில் ஆண்டு அட்டூழியம் செய்துவிட்டுப் போயிருக்கிறார்களா என்று பதைபதைக்கச் செய்யும் மனித அரக்கர்களின் வரலாற்றைப் பேசுகிறது. அறிவியலும் நாகரிகமும் தழைத்தோங்கிய நவீன காலத்திலும் காட்டுமிராண்டிகளாக நாட்டை ஆண்ட நயவஞ்சகர்களின் நரித்தனங்களைத் தோலுரித்துக் காட்டுகிறது. குரூரமும் கொடூரமும் மமதையும் அதிகாரத் திமிரும் நிறைந்த ராட்சஷர்களின் ரத்தவெறிப் பக்கங்கள் மீது வெளிச்சம் பாய்ச்சுகிறது. ஜூனியர் விகடனில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற தொடரின் நூல் வடிவம்.