இன்று பெற்றவை

இன்று பெற்றவை
எந்த ஒரு நாட்குறிப்பும் ஆர்வமூட்டுவதே. அதில் ஒரு மனிதனின் வாழ்க்கை உள்ளது. எழுத்தாளனின் நாட்குறிப்பு என்பது ஒரு பண்பாடு தன் நாட்குறிப்பை எழுதுவதுபோல.கடந்த சிலவருடங்களில் ஜெயமோகன் பண்பாட்டு அரசியல் மற்றும் இலக்கிய விவாதங்களைப் பற்றி எழுதிய சிறிய குறிப்புகளின் நான்வழி அமைப்பு இந்நூல்.இங்கே என்ன பேசப்பட்டது என்பதற்கும் என்ன பேசப்படவில்லை என்பதற்கும் சான்று இது.நுண்ணிய அவதானிப்புகளும் எதிர்வினைகளும் அடங்கியது.
அன்றாட வாழ்க்கையில் ஓர் எழுத்தாளன் எதிர் கொள்ளும் தருணங்கள் முக்கியமானவை. ஒரு முகம் சிதறிய பல பொருட்களில் பிரதிபலிப்பது போல எல்லாருக்கும் உரியவைதான் அவை. ஆனால் எழுத்தாளன் அவற்றை மொழியாக ஆக்கத்தெரிந்தவன். ஆகவே எங்கும் பதிவாகாமல் காற்றில் கலந்து மறையக்கூடும் அனுபவங்கள் மொழியில் கல்வெட்டாக மாறுகின்றன.
சமகாலப் பதிவுகள் இவை. எண்ணங்கள், எதிர்வினைகள். சென்ற சில ஆண்டுகளின் உணர்வுகளையும் நிகழ்வுகளையும் அவற்றில் திறக்கும் புதிய கோணங்களையும் காட்டுபவை என்பதனால் முக்கியமானவை.